Published:Updated:

தவான் அதிரடி - ஹாங்காங்குக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

தவான் அதிரடி - ஹாங்காங்குக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
தவான் அதிரடி - ஹாங்காங்குக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியில், ஹாங்காங் அணிக்கு 286 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

PC : ICC

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், துபாயில் உள்ள அபுதாபியில் நடைபெற்றுவருகின்றன. இன்றைய போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஹாங்காங் அணியை இன்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹாங்காங், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது. விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில், 7 ஓவரில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. ரோஹித் ஷர்மா 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 45-1 என்ற கணக்கில் முதல்விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு, ஷிக்கர் தவானின் அரை சதம் கைகொடுத்தது. தொடர்ந்து, இந்தியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், ஷிக்கர் தவான் 127 ரன்களைக் குவித்து அதிரடிகாட்டினார். அம்பதி ராயுடுவின் ஸ்கோரும் அணியின் ரன் குவிப்புக்குப் பெரும் உதவியாய் இருந்தது. இதையடுத்து, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களைச் சேர்த்தது. 2018 ஆசியக் கோப்பைத் தொடரில், இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.