Published:Updated:

ஐ.பி.எல்: கோலி சரவெடியில் சன் ரைசர்ஸ் வீழ்ந்தது

ஐ.பி.எல்: கோலி சரவெடியில் சன் ரைசர்ஸ் வீழ்ந்தது
ஐ.பி.எல்: கோலி சரவெடியில் சன் ரைசர்ஸ் வீழ்ந்தது
ஐ.பி.எல்: கோலி சரவெடியில் சன் ரைசர்ஸ் வீழ்ந்தது

பெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. இதன்படி களம் இறங்கிய ஆக் ஷாத் ரெட்டி (12), பார்த்தீவ் பட்டேல் (20), கேப்டன் சங்கக்கரா (23) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்தனர். 

இந்த நெருக்கடியான சூழலில் 4வது விக்கெட்டுக்கு கைகோர்த்த கேமரூன் ஒயிட்டும், திசரா பெரேராவும் சரிந்துகிடந்த ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். வினய்குமார், ஹென்ரிக்சின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்கள் பறந்தன. இதனால் ஹைதராபாத்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 142 ரன்களை எட்டிய போது திசரா பெரேரா 40 ரன்களில் போல்டு ஆனார். அரைசதத்தை கடந்த கேமரூன் ஒயிட் 52 ரன்களில் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. கடைசி 8 ஓவர்களில் மட்டும் அந்த அணி 94 ரன்கள் குவித்தது.

பின்னர் 162 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணியின் இன்னிங்சை கிறிஸ் கெய்லும், அகர்வாலும் தொடங்கினர். கெய்லை விட துரிதமான தொடக்கம் தந்த அகர்வால் 29 ரன்களிலும்,கெய்ல் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் துவக்கத்தில் சற்று நிதானமாக ஆடினர். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி பவுண்டரியும், சிக்சருமாக விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதற்கிடையே, டிவில்லியர்ஸ் 15 ரன்களுடன் வெளியேறினார். ஆனாலும் கேப்டன் கோலியின் சரவெடியை, ஹைதராபாத் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உலகின் நம்பர் ஒன் பவுலரான ஸ்டெயின் சிக்கனமாக பந்து வீசினாலும் அவராலும் இந்த முறை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.

##~~##
தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்த கோலி, சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ராவின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களும், திசரா பெரேராவின் ஓவரில் 3 பவுண்டரிகளும் ஓட விட்டார். இறுதியில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 47 பந்தில் 93 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள அடக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் இந்த சீசனில் 150 ரன்களுக்கு மேலான ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற பெருமையும் பெங்களூர் அணிக்கு கிடைத்தது.
முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சூப்பர் ஓவரில் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பெங்களூர் அணி இப்போது பழிதீர்த்துக் கொண்டதுடன், ஹைதராபாத் அணியின் ‘ஹாட்ரிக்’ வெற்றி வாய்ப்பையும் தடுத்து நிறுத்தியது. கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.