Published:Updated:

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு தோல்வி தொடர்கிறது

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு தோல்வி தொடர்கிறது
ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு தோல்வி தொடர்கிறது

புதுடெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த அணி சந்திக்கும் 2வது தோல்வியாகும்.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 4வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்– டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் டிராவிட் 65 ரன்களும், ஸ்டூவர்ட் பின்னி 40 ரன்களும் எடுத்தனர். டிராவிட் தனது 8வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

Advertisement

##~~##
டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சிறப்பான அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்தார்.
மறுமுனையில் உன்முக்த் சந்த் (23), கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே (19) ஆட்டம் இழந்தாலும், டேவிட் வார்னர் அணியை சரிவு பாதையில் இருந்து தூக்கி நிறுத்தினார். கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன.
இந்த பரபரப்பான சூழலில் டேவிட் வார்னர் (77) 19வது ஓவரில் பிராட் ஹாட்ஜால் ரன் அவுட் செய்யப்பட்டார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பிறகு கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன.
20வது ஓவரை அட்டகாசமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் கெவோன் ஹூப்பர்  2 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், வெறும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். டெல்லி அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லி அணிக்கு இது 2வது தோல்வியாகும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.