Published:Updated:

ஐ.பி.எல்.: ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி!

ஐ.பி.எல்.: ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி!
ஐ.பி.எல்.: ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி!
ஐ.பி.எல்.: ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி!

ஹைதராபாத்: 6-வது ஐ.பி.எல்., தொடரின் 3வது லீக் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

6-வது ஐ.பி.எல்., தொடரின் 3வது லீக் போட்டி, ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி முதலில் ‘பில்டிங்கை’ தேர்வு செய்தது.

பேட் செய்த ஹைதராபாத் அணி அக்ஷாத் ரெட்டி, பார்த்திவ் படேல் ஜோடியை இறக்கியது. டிண்டா வேகத்தில் பார்த்திவ் படேல் 19 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் சங்கரகரா ராகுல் சர்மா சுழல் பந்து வீச்சில் 15 ரன்னில் வெளியேறினார். நிதானமாக ஆடிய அக்ஷாத் ரெட்டி 27 ரன் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கிடம் சரணடைந்தார். அடுத்து வந்த காமிரான் ஒயிட் 10 ரன்னிலும் வெளியேறினார். ஹைதராபாத் அணி 14.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்தது.

அதிரடியாக களம் இறங்கி ஆடிய திசாரா பெரேரா, அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 18 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில், டிண்டா வீசிய பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த விஹாரியும் 11 ரன்னோடு வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 126 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.

##~~##
குறைவான ரன்னை எளிதாக அடைய புனே வாரியர்ஸ் அணி உத்தப்பாவை களம் இறக்கியது. நல்ல துவக்கம் தந்த அவர் 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்தவர்களும் சொதப்ப சாமுவேல்ஸும் 5 ரன்னோடு வந்த வழி திரும்பினார்.
அமித் மிஸ்ராவின் சுழலில் முக்கிய விக்கெட்டான யுவராஜ் சிங்கை(2) வெளியேற்றினார். தொடர்ந்து மனிஷ் பாண்டேவையும்(15), அபிஷேக் நாயரையும்(19) வெளியேற்றினார். ராஸ் டெய்லர்(19), மிட்சல் மார்ஷ்(7) சொற்ப ரன்களோடு வெளியேறினர்.
போட்டியின் 19வது ஓவரை ஸ்டைன் வீச 2வது பந்தில் புவனேஸ்வர் குமாரை(3) அவுட்டாக்கினார். 3வது பந்தில் ராகுல் சர்மாவும்(0) வெளியேறினார். அடுத்து வந்த டிண்டா தடுத்து ஆட, "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. ஆனாலும் 5வது பந்தில் டிண்டாவை(0) வெளியேற்றிய ஸ்டைன், ஹைதராபாத் அணியின் முதல் வெற்றியை உறுதி செய்தார். புனே வாரியர்ஸ் அணி 18.5 ஓவரில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஹைதராபாத் சார்பில் அமித் மிஸ்ரா, ஸ்டைன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.ஆட்ட நாயகன் விருதை அமித் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
ஹைதராபாத் அணியின் அமித் மிஸ்ரா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 75வது விக்கெட்டை பதிவு செய்தார். இந்த போட்டியின் மூலம் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது பவுலரானார். அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார். இதுவரை 60 போட்டியில் 77 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கா (56 போட்டி, 83 விக்கெட்) உள்ளார்.