Published:Updated:

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ராஹிக்கு தங்கம்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ராஹிக்கு தங்கம்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ராஹிக்கு தங்கம்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ராஹிக்கு தங்கம்!

புதுடெல்லி: கொரியாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவின் ராஹி சர்னோபாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை 2013-ல் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

இந்தியாவின் ராஹி 25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் இறுதிச் சுற்றில் கொரியாவின் கியாங்கே கிம்மை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில், இந்தியாவின் சார்பில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்ட இளம் வீராங்கனையான ராஹி, வென்றுள்ள முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கம் இது. கடந்த 2011-ல் வெண்கலப் பதக்கம் வென்றதால், ஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.