Published:Updated:

2வது ஒருநாள்: கம்பீர் அசத்தலில் இந்தியா வெற்றி!

Vikatan Correspondent

ஜெய்ப்பூர், டிச.02,2010

ஜெய்ப்பூரில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. ##~~##

கம்பீரின் அபார சதமும், இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சும் இந்த வெற்றிக்கு வித்திட்டது.

இப்போட்டியில், 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.  இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கவுதம் கம்பீர் ஆட்டமிழக்காமல் 138 ரன்களைக் குவித்தார். கோலி 64 ரன்களையும், விஜய் 33 ரன்களையும் எடுத்தனர். யுவராஜ் ஆட்டமிழக்காமல்16 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக, நியூஸிலாந்து தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமகா குப்தில் 70 ரன்களையும், ஸ்டைரிஸ் 59 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் கவுதம் கம்பீர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.