Published:Updated:

ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம்

புதுடெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூரில் மே 4, 6 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த ஆட்டங்கள் வேறுதேதிக்கு மாற்றப்பட்டு உள்ளன.

இதன்படி மே 4ஆம் தேதி நடக்க இருந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் மே 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதே போல் மே 6ஆம் தேதி நடைபெற இருந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 23ஆம் தேதி மொகாலியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்–டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஆட்டம் தரம்சாலாவுக்கு மாற்றப்பட்டு மே 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக மே 16ஆம் தேதி தரம்சாலாவில் நடக்க இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்–பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மே 6ஆம் தேதி மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ்–கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் டெல்லியில் மோத இருந்த ஆட்டத்தின் தேதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மே 13ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 23ஆம் தேதியே நடத்தப்படுகிறது.

##~~##
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரு ஆட்டங்களின் தேதிகளிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் இடையே சென்னையில் மே 16ஆம் தேதி நடக்க இருந்த ஆட்டம் மே 14ஆம் தேதிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையே பெங்களூரில் மே 18ஆம் தேதி நடக்க இருந்த ஆட்டம் மே 19ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.