Published:Updated:

‘கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்’- முரளிதரன் சொல்கிறார்

‘கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்’- முரளிதரன் சொல்கிறார்
‘கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்’- முரளிதரன் சொல்கிறார்
‘கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்’- முரளிதரன் சொல்கிறார்

புதுடெல்லி: "இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்" என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட உள்ள 13 இலங்கை வீரர்களில் ஒருவரான 40 வயதான முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர் ஆவார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்க தயாராகி வரும் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நாங்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். இது அரசின் முடிவு. அவர்களால் எங்களுக்கு பாதுகாப்பு தர முடியாவிட்டால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகிகளிடம் பேசினேன். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சென்னையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் என்னால் விளையாட முடியும்.

இலங்கை அணிக்காக நான் 20 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். ஒரு தமிழன் என்ற முறையில் எனக்கு எந்த பிரச்னையும் இருந்ததில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இலங்கை அரசும், கிரிக்கெட் வாரியமும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது. நான் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தபோதும் கூட எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

##~~##
இலங்கையில், ஒரு நேரத்தில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் போர் நடந்தது. ஆனால் இப்போது மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தமிழர்கள் எப்படி இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதை நேரில் வந்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்தவைகளை மறக்க வேண்டும். இன்னொரு போர் சூழலை நாங்கள் விரும்பவில்லை.
சென்னையில் விளையாட அனுமதி அளித்தால், நிச்சயம் அங்கு சென்று விளையாடுவோம். சென்னை எனக்கு 2வது தாய்வீடு மாதிரி. எனது மனைவி மதிமலர் சென்னையை சேர்ந்தவர். இது எனக்கு உணர்வுபூர்வமான சூழல். அரசியல் பிரச்னைக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் விளையாடி, ரசிகர்களை மகிழ்விப்பதை மட்டுமே விரும்புகிறோம்.
இவ்வாறு முரளிதரன் கூறியுள்ளார்.