Published:Updated:

'சென்னை ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள் இல்லை'

'சென்னை ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள் இல்லை'
'சென்னை ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள் இல்லை'
'சென்னை ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள் இல்லை'

புதுடெல்லி: சென்னையில் நடைபெறுகிற பெப்சி ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் . ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

##~~##
இது தொடர்பாக ஐ.பி.எல். தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான ராஜீவ் சுக்லா விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கூடியது. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற வீரர்கள், போட்டிகளை காண வருகிற பார்வையாளர்கள், மைதானங்களில் பணியாற்றுகிறவர்கள் என அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருகிறது.
எனவே இரண்டு அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம். உள்ளூர் உணர்வுகள், இலங்கை வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கவனத்தில் கொண்டது.
உள்ளூர் நிர்வாகம் ஒன்றைக் கூறுகிறபோது, நாங்கள் அதற்கு செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்தப் போட்டியை நடத்துவதில் குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில அரசு அதிகாரிகளின் உதவி எங்களுக்கு தேவையாக இருக்கிறது. உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.
எனவே சென்னையில் நடைபெறுகிற பெப்சி ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி 9 ஐ.பி.எல். அணிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும்" என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.