Published:Updated:

அணியிலிருந்து தோனி நீக்கப்படாமல் காப்பாற்றினேன்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்

அணியிலிருந்து தோனி நீக்கப்படாமல் காப்பாற்றினேன்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்
அணியிலிருந்து தோனி நீக்கப்படாமல் காப்பாற்றினேன்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்
அணியிலிருந்து தோனி நீக்கப்படாமல் காப்பாற்றினேன்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்

புதுடெல்லி: இந்திய அணியிலிருந்து தோனியை நீக்க வேண்டும் என்று பலமுனைகளிலிருந்தும் அழுத்தங்கள் வந்தபோதும், தனக்குள்ள முடிவெடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, அணியிலிருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்படாமல் தாம் காப்பாற்றியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரை, தோனி தலைமையில்  4-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்தது இந்திய அணி.இதற்காக தற்போது தோனியை பலதரப்பிலும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 4 தொடர்களிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மற்றொரு நான்கு தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தபோது, தோனியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று தேர்வுக் குழுவினர் வற்புறுத்தியதாக அப்போது செய்தி வெளியாகி இருந்தது.

##~~##
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் இது குறித்து கேட்டபோது, அணி வீரர்களை தேர்வு செய்வது குறித்து விவாதிப்பது சரியனாதல்ல என்று கூறிய அவர், இருப்பினும் அப்படி ஒரு நிர்ப்பந்தம் வந்தது உண்மைதான் என்றும், அதே சமயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டவிதிகள், தமக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்திருந்ததாகவும், அதன்படி அணியிலிருந்து தோனி நீக்கப்படாமல் தாம் காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்.