Published:Updated:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா சாதனை

டெல்லி: கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கி்ல் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

டெல்லியில் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 262 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியி்ல் அதிகபட்சமாக சிடில் 51 ரன்னும், ஸ்மித் 46 ரன்னும், ஹக்கீஸ் 45 ரன்னும், கோவன் 38 ரன்னும், பேட்டின்சன் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஓஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தொடக்க வீரர்கள் பூஜாரா- முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது. 52 ரன் எடுத்திருந்த பூஜாரா, லயான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த கோலி ஒரு ரன்னில் பௌவிலியன் திரும்பினார். இதையடுத்து களம் புகுந்த சச்சின், விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. முரளி விஜய் 57  ரன்னில் வெளியேறியதையடுத்து களம் இறங்கிய அறிமுக வீரர் ரஹானே 7 ரன்னில் வீழ்ந்தார்.

பின்னர் சச்சின்- கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் தாக்குபிடிக்க முடியவில்லை. 32 ரன் எடுத்த திருப்தியோடு சச்சின் ஆட்டம் இழந்தார்.

ஆனால் தோனி அதிரடியாக விளையாடி 23 ரன்னில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட்டின்சன் பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆல் ரவுண்டர் ஜடேஜா அதிரடியாக விளையாடி 43 ரன் எடுத்தார்.

பின்னர் வந்த அஸ்வின் (12), இசாந்த் சர்மா (0), ஓஜா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். புவனேஷ்குமார் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 14 ரன்னில் இருந்தார்.

##~~##
ஆஸ்திரேலியா தரப்பில் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டின்சன், சிடில், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
10 ரன் பின்னடைவு அடைந்த ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் வார்னர் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் 8 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
பின்னர் வந்த ஹக்கீஸ் (6), கேப்டன் வாட்சன் (5), ஸ்மித் (18), வாடே (19), ஜான்சன் (0), பேட்டின்சன் (11) ஆகியோ ர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.  அதிகபட்சமாக வேகப்பந்துவீச்சாளர் சிடில் 50 ரன் எடுத்தார். முடிவில் 164 ரன்னுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சுலபமான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் முரளி விஜய் 11 ரன்னில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து கோலி களம் இறங்கினார். புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கோலி அபாரமாக விளையாடினார்.
41 ரன் எடுத்திருந்தபோது கோலி, நாதன் லயான் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். பின்னர் வந்த ரஹானே ஒரு ரன்னில் வெளியேறினார். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். தொடக்க வீரர் புஜாரா நன்றாக விளையாடி அணிக்கு வெற்றித் தேடித் தந்தார்.
31.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தோனி 12 ரன்னிலும், புஜாரா 82 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஆட்டநாயகனான ஜடேஜாவும், தொடர் நாயகனாக தமிழக வீரர் அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் 4-0 என்று தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பழி தீர்த்துக் கொண்டது.
அதுமட்டுமின்றி டெஸ்ட் வரலாற்றில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும்.
ஆஸ்திரேலியா அணி இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
4 போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய் 7 இன்னிங்சில் விளையாடி 430 ரன்கள் குவித்து சாதித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களி்ல் ஜடேஜா 2வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 24 விக்கெட்டும், ஆஸ்திரேலியா வீரர்கள் லயான் 15 விக்கெட்டும், சிடில்,  பேட்டின்சன்  தலா 9 விக்கெட்டுகளையும் எடு்த்துள்ளனர்.