Published:Updated:

164 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!

164 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
164 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
164 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில்  2வது இன்னிங்சில் 164 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி, இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 154 ரன்கள் நிர்ணயித்துள்ளது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 262 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் சிடில் 51 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 272 ரன்னுக்கு  அவுட்டானது. அதிகபட்சமாக தமிழக வீரர் முரளி விஜய் 57 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

10 ரன் பி்ன்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க  முடியாமல் 164 ரன்னுக்கு சுருண்டது.

##~~##
முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த சிடில் இந்த இன்னிங்சிலும் அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தற்போது ஆஸ்திரேலியா அணி 154 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. முரளி விஜய் - புஜாரா களத்தில் உள்ளனர்.