Published:Updated:

6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்

6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்
6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 135 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

தொடக்க வீரர் வார்னர் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹக்கீஸ், கோவனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடியது.

##~~##
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 67 ரன் சேர்த்திருந்த நிலையில் இசாந்த் சர்மா ஜோடியை பிரித்தார். ஹக்கீஸ் 45 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து, வந்த தற்காலிக கேப்டன் வாட்சன், கோவனுடன் இணைந்தார். கோவன் 38 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் போல்டு ஆனார்.
இதைத் தொடர்ந்து சிறிது  நேரம் கூட நிலைத்து நிற்காத வாட்சன் 17 ரன்னில், ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் வாடே 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும் வெளியேறினர்.
தற்போது ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 13 ரன்னிலும், ஜான்சன் 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் இசாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.