Published:Updated:

டெல்லி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா பேட்டிங்: களமிறங்கும் ரஹானே

டெல்லி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா பேட்டிங்: களமிறங்கும் ரஹானே
டெல்லி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா பேட்டிங்: களமிறங்கும் ரஹானே
டெல்லி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா பேட்டிங்: களமிறங்கும் ரஹானே

டெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஜின்கிய ரஹானே களம் இறங்க உள்ளார்.

சென்னை, ஹைதராபாத், மொகாலி ஆகிய இடங்களில் நடந்த 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்தது. இந்த அணியில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.

இந்த போ ட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் கிளார்க்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஷேன்வாட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் மொகாலி டெஸ்ட் போ ட்டியில் சதம் அடித்த அறிமுக வீரர் தவான் காயம் காரணமாக விளையாட வில்லை. அவருக்கு பதிலாக அஜின்கிய ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். ரஹானேவுக்கு முதல் டெஸ்ட் போட்டியாகும்.
தொடக்க ஆட்டக்காரர் வார்னர் டக் அவுட் ஆனார். இவரது விக்கெட்டை இசாந்த் சர்மா கைப்பற்றினார். தற்போது ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை இழந்த 9 ரன்கள் எடுத்துள்ளது.