Published:Updated:

அறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0

Vikatan Correspondent
அறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0
அறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0
அறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0

மொகாலி: மொகாலியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தவான் அதிரடியாக விளையாடி 85 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி 408 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஸ்டார்க் 99 ரன் எடுத்தார். தொடக்க வீரர்கள் கோவன் 86 ரன்னும், வார்னர் 71 ரன்னும், ஹக்கீஸ் 92 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டும், அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

##~~##
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்- முரளி விஜய் ஜோடி ஆஸ்ட்ரேலியா பந்துவீச்சை நொறுக்கி தள்ளியது. தனது முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஷிகர் தவான், அதிரடியாக விளையாடி 85 பந்தில் 100 ரன் அடித்தார். அறிமுகப் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் அரை சதம் அடித்தார். இந்நிலையில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 283 ரன்களை எடுத்திருந்தது. ஷிகர் தவான் 185 ரன்களுடன் களத்தில் உள்ளார்.