Published:Updated:

ரத்தானது இந்தியா – பாகிஸ்தான் ஹாக்கி தொடர்!

Vikatan Correspondent
ரத்தானது இந்தியா – பாகிஸ்தான் ஹாக்கி தொடர்!
ரத்தானது இந்தியா – பாகிஸ்தான் ஹாக்கி தொடர்!
ரத்தானது இந்தியா – பாகிஸ்தான் ஹாக்கி தொடர்!

புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் நடக்க இருந்த இந்தியா– பாகிஸ்தான் அணிகள் இடையே ஹாக்கி தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட முடிவு செய்து இருந்தது. இந்த ஆட்டங்கள் ராஞ்சி, லக்னோ, டெல்லி, மொகாலி, ஜலந்தர் ஆகிய நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

இதையடுத்து இந்திய ஹாக்கி அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த ஆட்டங்கள் லாகூர், பைசலாபாத், கராச்சி, சியல்கோட் ஆகிய நகரங்களில் நடத்த முடிவாகி இருந்தது.

இதற்கிடையில் ஹைதராபாத் குண்டு வெடிப்பு, ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முகாம் மீது துப்பாக்கி சூடு சம்பவம் ஆகியவற்றில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டதால் இரு நாடுகள் இடையிலான உறவில் பலத்த விரிசல் நிலவுவதால், இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆக்கி தொடருக்கு மத்திய வெளியுறவு துறை அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

##~~##
இதனால் இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட ஆக்கி தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் நரிந்தர் பத்ரா கூறுகையில், இரு நாடுகள் இடையிலான எந்தவொரு போட்டி தொடரானாலும் மத்திய விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு துறை அமைச்சகம் ஆகியவைகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாகும். நாங்கள் விளையாட்டு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றுவிட்டோம். ஆனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பேக்ஸ் செய்தியில் இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடரை நடத்தவோ அல்லது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகள் இடையே நடந்து வரும் சம்பவங்களை மனதில் கொண்டு அரசின் முடிவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். போட்டி நடக்க வேண்டும் என்று விரும்பினாலும், நாட்டின் மரியாதை மற்றும் கவுரவத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக நான் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனத்தை குறை சொல்லவில்லை. பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழ்நிலையே இதற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் நரிந்தர் பத்ரா.