Published:Updated:

முதலாவது டெஸ்ட் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது மேற்கிந்திய தீவு அணி

முதலாவது டெஸ்ட் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது மேற்கிந்திய தீவு அணி
முதலாவது டெஸ்ட் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது மேற்கிந்திய தீவு அணி
முதலாவது டெஸ்ட் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது மேற்கிந்திய தீவு அணி

பிரிட்ஜ்டவுன்: பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 211 ரன் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது. கேப்டன் டேரன் சமி (73), ராம்டின் (62), சாமுவேல்ஸ் (51) ஆகியோரின் சிறப்பாக விளையாடினர்.

##~~##
96 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3வது நாளான நேற்று உணவு இடைவேளைக்கு முன்பாக 41.4 ஓவர்களில் 107 ரன்களில் சுருண்டது.
இந்த அணியில் சிபான்டா (15), எர்வின் (23), கிரீமர் (14) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். மேற்கிந்திய தீவு அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஷில்லிங் போர்டு 6 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி மேற்கிந்திய தீவு அணி ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. 2 போட்டி கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவு அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.