Published:Updated:

மொகாலி டெஸ்ட் போட்டி மழையால் கைவிடல்!

மொகாலி டெஸ்ட் போட்டி மழையால் கைவிடல்!
மொகாலி டெஸ்ட் போட்டி மழையால் கைவிடல்!
மொகாலி டெஸ்ட் போட்டி மழையால் கைவிடல்!

மொகாலி: மொகாலியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், ‌ஹைதராபாத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.

இதனிடையே, தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்காதவாட்சன், ஜேம்ஸ் பேட்டின்சன், மீச்செல் ஜான்சன், உஸ்மான் காவாஜா ஆகியோரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

##~~##
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.
கனமழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நாளையும் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான்.
வாட்சன் உள்பட 4 பேர் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.