Published:Updated:

`34 ஆண்டுகள் இல்லாத சரிவு' - ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய ஆஸ்திரேலியா!

`34 ஆண்டுகள் இல்லாத சரிவு' - ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய ஆஸ்திரேலியா!
`34 ஆண்டுகள் இல்லாத சரிவு' - ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய ஆஸ்திரேலியா!

`34 ஆண்டுகள் இல்லாத சரிவு' - ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய ஆஸ்திரேலியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் 34 ஆண்டுகள் இல்லாத சரிவை ஆஸ்திரேலிய அணி சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இது போதாத காலம். பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கிய பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சூறாவளியே வீசியுள்ளது. இதனால் முன்னணி வீரர்கள் இல்லாமல் அந்த அணி தவித்துக்கொண்டிருக்கிறது. தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொன்டுள்ள அந்த அணி அங்கு நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு புதிய அணி போலவே உள்ளது. இதற்கிடையே, ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. 

ஒவ்வொரு தொடர் முடிந்ததும், அவ்வப்போது தரவரிசை பட்டியல் வெளியிடுவது வழக்கம்தான் என்றாலும் நேற்று வெளியான பட்டியல் ஆஸ்திரேலிய அணிக்குச் சற்று அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம் 34 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த முறை அந்த அணி தரவரிசையில் பின்தங்கியுள்ளது. நேற்று வெளியான பட்டியலில் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. எப்போதும் முதல் 5 இடங்களையே மாறி மாறி பெற்றுவந்த அந்த அணி கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. முன்னதாக 1984 ம் ஆண்டு அந்த அணி ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இந்தப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடமும், இந்தியா இரண்டாமிடமும், அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு