Published:Updated:

2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 74 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 237 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கிளார்க் 91 ரன் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 503 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் முரளி விஜய் 167 ரன்னும், புஜாரா 204 ரன்னும் எடுத்தனர். கேப்டன் தோனி 44 ரன்கள் எடுத்தார்.

266 ரன்கள் பின்தங்கி இருந்த ஆஸ்திரேலியா அணி, 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் வார்னர் 26 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் போல்ட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஹக்கீஸ், அஸ்வின் பந்தில் டக் அவுட் ஆனார்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் கோவன் 26 ரன்னிலும், வாட்சன் 9 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நாளை 4வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.