Published:Updated:

புஜாரா 162*-இந்தியா 311 ரன் குவிப்பு

புஜாரா 162*-இந்தியா 311 ரன் குவிப்பு
புஜாரா 162*-இந்தியா 311 ரன் குவிப்பு
புஜாரா 162*-இந்தியா 311 ரன் குவிப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 311 ரன் குவித்துள்ளது. அபாரமாக விளையாடி வரும் புஜாரா 162 ரன்னில் களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா 237 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி வீரர் சேவாக் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் முரளி விஜய்- புஜாரா ஜோடியை பிரிக்க நினைத்த ஆஸ்ட்ரேலியா கேப்டன் கிளார்க் கனவு தகர்ந்து போனது.

இந்த ஜோடி ஆஸ்ட்ரேலியா பந்துவீச்சை நொறுக்கி தள்ளியதோடு இவரும் சதம் அடித்தனர்.

புஜாரா தனது 4வது சதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து தமிழக வீரர் முரளி விஜய் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார்.

2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 129 ரன்னிலும், புஜாரா 162 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நாளை 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.