Published:Updated:

டி-20: சிம்மோன்ஸ் அதிரடியில் ஜிம்பாப்வே தோல்வி

டி-20: சிம்மோன்ஸ் அதிரடியில் ஜிம்பாப்வே தோல்வி
டி-20: சிம்மோன்ஸ் அதிரடியில் ஜிம்பாப்வே தோல்வி
டி-20: சிம்மோன்ஸ் அதிரடியில் ஜிம்பாப்வே தோல்வி

ஆண்டிகுவா:ஆண்டிகுவாவில் நேற்றிரவு நடந்த டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  சிம்மோன்ஸ் அதிரடியில் ஜிம்பாப்வே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு அணி வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அந்த அணியில் வாலர் 49 ரன்னும், எர்வின் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

மேற்கிந்திய தீவு அணியில் பெஸ்ட் 3 விக்கெட்டும், நரேன், பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 131 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சிம்மோன்ஸ் அதிரடியாக விளையாடி 49 பந்தில் 63 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. அவர் 6 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

பிராவோ 38 ரன்னும், தொடக்க வீரர் சார்லஸ் 26 ரன்னும் எடுத்தனர். மற்றொரு பிராவோ டக் அவுட் ஆனார்.

ஆட்டநாயகனாக சிம்மோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட தொடரை 1--0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது. 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.