Published:Updated:

26 ரன்னில் சேவாக் அவுட்

26 ரன்னில் சேவாக் அவுட்
26 ரன்னில் சேவாக் அவுட்
26 ரன்னில் சேவாக் அவுட்

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன் எடுத்துள்ளது. அதிரடி வீரர் சேவாக் 6 ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா அணி 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சேவாக் 4 ரன்னிலும், விஜய் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. வந்து சிறிது நேரத்தில் சிடில் பந்தில் சேவாக் (6) ஆட்டம் இழந்து வெளியேறினார். இவர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

இதையடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் விஜய்யுட்ன ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

முரளி விஜய் 21 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்புதான் புஜாரா ரன் அவுட்டில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.