Published:Updated:

ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்: இந்தியா 3/182

ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்: இந்தியா 3/182
ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்: இந்தியா 3/182
ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்: இந்தியா 3/182

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்  நாள் ஆட்டத்தில்,  இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை குவித்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய  முதல் நாள் ஆட்ட நேர  முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து இருந்தது. 

##~~##
இன்று தொடர்ந்த 2வது நாள் ஆட்டத்தில், அந்த அணியின் வீரர்களில் அதிகபட்சமாக  மைக்கேல் கிளார்க் (130), ஹென்ரிக்ஸ் (68) மற்றும் வார்னர் (59) ரன்கள் எடுத்து  ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 133 ஓவர்களில் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், முரளி விஜய் 10 ரன்களும்,  சேவாக் 2 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த புஜாரா 44 ரன்கள்  எடுத்தார். இவர்கள் மூவரின் விக்கெட்டையும் பட்டின்சன் கைப்பற்றினார்.
பின்னர் சச்சின் டெண்டுல்கள் மற்றும் விராட் கோலி இணைந்து ஆடினர். ஆட்ட நேர  முடிவில் சச்சின் டெண்டுல்கர் 71 ரன்களுடனும், கோலி 50 ரன்களுடனும் களத்தில்  இருந்தனர்.
ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது.