Published:Updated:

கோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்! - #RCBVsDD

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்! - #RCBVsDD
கோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்! - #RCBVsDD

2018 ஐபிஎல், லீக் சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாயின்ட்ஸ் டேபிளின் கட்டக் கடைசியில் இருந்த பெங்களூருவுக்கும், டெல்லி டேர்டெவில்ஸுக்கும்தான் நேற்று மேட்ச். ஐபிஎல்-லை விட்டு முதலில் வெளியேறும் அணி எது என்பதை தெரிந்துகொள்வதற்கான மேட்ச்தான் இது. பெங்களூரு வென்றது. டெல்லி தோற்றது. ரிசல்ட் சிம்பிள்தான். ஆனால் மேட்ச் சிம்பிளாக முடியவில்லை. பல சுவாரஸ்யங்களுடன் நடந்து முடிந்தது டெல்லி வெர்சஸ் பெங்களூரு போட்டி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2018 ஐபிஎல்-ல் இருந்து லீக் சுற்றுகளோடு வெளியேறும் முதல் அணி என்கிற பெருமையை பெற்றிருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். 182 ரன்கள் என்பது டெல்லி மைதானத்தில் நல்ல ஸ்கோர்தான். ஆனால், கோலி- டிவில்லியர்ஸ்  பார்ட்னர்ஷிப் போட்டதும் 180 ரன்கள் என்பதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை என்பதுபோல சுருங்கிப்போனது. #RCBVSDD

 2018 ஐபிஎல், லீக் சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாயின்ட்ஸ் டேபிளின் கட்டக் கடைசியில் இருந்த பெங்களூருவுக்கும், டெல்லி டேர்டெவில்ஸுக்கும்தான் நேற்று மேட்ச். ஐபிஎல்-லை விட்டு முதலில் வெளியேறும் அணி எது என்பதை தெரிந்துகொள்வதற்கான மேட்ச்தான் இது. பெங்களூரு வென்றது. டெல்லி தோற்றது. ரிசல்ட் சிம்பிள்தான். ஆனால் மேட்ச் சிம்பிளாக முடியவில்லை. பல சுவாரஸ்யங்களுடன் நடந்து முடிந்தது டெல்லி வெர்சஸ் பெங்களூரு போட்டி.


மீண்டும் குழப்பிய கோலியின் ப்ளேயிங் லெவன்!

டாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கேப்டன் கோலி. இந்த ஐபிஎல் சீசனில் மூன்று மேட்சுகள் விளையாடி ஃபார்முக்கே வராத இளம் வீரர் சர்ஃபரஸ் கானை அணியில் சேர்த்திருந்தார் கோலி. மெக்கல்லம் இல்லை. அதற்கு பதிலாக மொயின் அலியை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார். வாஷிங்டன் சுந்தர், முரளி அஷ்வின் இருவரும் அணியில் இல்லை. உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மொகமது சிராஜ், கிராந்தோம் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்.
டெல்லி ஒரு மிகப்பெரிய சாதனையை நேற்று நிகழ்த்தியது. நேபாள நாட்டின் முதல் கிரிக்கெட் வீரராக அணிக்குள் இடம்பிடித்தார் சந்தீப் லாமிசேன். 17 வயதேயான லாமிசேன் லெக் ஸ்பின்னர். ப்ரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லாமிசேன் என டெல்லி ப்ளேயிங் லெவனில் நேற்று மட்டும் 18 வயதுக்குட்பட்ட மூன்று வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.


சாஹலுடன் முதல் ஓவர்!

இதுவரை பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே பெளலிங்கை தொடங்கிய கோலி, நேற்று சாஹலிடம் முதல் ஓவரைக் கொடுத்தார். ப்ரித்வி ஷா, ஜேசன் ராய் இருவருமே முதல் ஓவரில் சாஹலின் பந்துகளை சந்தித்தனர். ஆனால் அடித்துஆடவில்லை. முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ப்ரித்வி ஷாவை அவுட் ஆக்கினார் சாஹல். அதிக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷா 2 ரன்களோடு கிளம்பினார். 

ஆனால் அடுத்த ஓவர் போட்ட உமேஷ் யாதவின் பந்தில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார் ஜேசன் ராய். உமேஷ் யாதவைப் போலவே சாஹலையும் அடிக்க நினைக்க மூன்றாவது ஓவரிலேயே 12 ரன்களுடன் வீழ்ந்தார் ராய். டெல்லி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, டெல்லியின் சூப்பர் ஸ்டார்ஸ் ஷ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பன்ட்டும் கூட்டணி போட்டனர். 
இந்த மேட்சில் பன்ட்டை நம்பி ஓடி ரன் அவுட் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷ்ரேயாஸ். அதேப்போல் பன்ட்டும் ஐயரின் விக்கெட்டை காலி செய்யவில்லை. இருவருமே பவர் ப்ளே ஓவர்களில் கண்டபடி ஆடி விக்கெட்டை இழக்கவும் இல்லை. 6 ஓவர்களில் 44 ரன்களுடன் இருந்தது டெல்லி. 8வது ஓவரில் அடிக்க ஆரம்பித்தார் பன்ட். சிராஜின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர். பத்தாவது ஓவரில் ஷ்ரேயாஸின் கதையை முடிக்க நல்ல வாய்ப்பு. கோலி, டிவில்லியர்ஸ் என இருவருமே கேட்ச்சைப் பிடிக்க ஓட, இருவருக்கும் நடுவில் விழுந்தது பந்து. இறுதியில் பிடிக்க முயன்று கேட்சைவிட்டார் டிவில்லியர்ஸ். 

சாஹலையும் பன்ட் விட்டுவைக்கவில்லை. 12வது ஓவரில் அடுத்தடுத்து 1சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார் பன்ட். மொயின் அலியின் 13வது ஓவரில் லாங் ஆனில் அற்புதமாக விழுந்துபிடித்து பன்ட்டை அவுட் ஆக்கினார் டிவில்லியர்ஸ். 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார் பன்ட். ரிஷப் பன்ட் அவுட் ஆனது டெல்லியின் வேகம் முழுவதுமாக குறைந்தது. 16வது ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட் ஆனார். மிகப்பொறுமையாக ஆடி 35 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார் ஐயர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட் இங்குதான் நடந்தது. டெல்லி அணிக்காக இந்த சீஸனில் முதல் போட்டியில் விளையாடிய அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் அதகளம் செய்தார். 17 வயதேயான இந்த பஞ்சாப் பொடியன் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்து பெங்களூருவுக்கு 182 ரன்கள் என டார்கெட் செட் செய்தார். 46 ரன்களில் மிக முக்கியமானது டிம் சவுத்தியின் ஓவரில்  அடுத்தடுத்து அபிஷேக் ஷர்மா அடித்த 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும்தான்.டெத் ஓவர்களில் சொதப்பும் பெங்களூரு இந்த மேட்சிலும் கடைசி 6 ஓவரில் 65 ரன்கள் விட்டுக் கொடுத்தது.


 

போட்டுப் பொளந்த கோலி- டிவில்லியர்ஸ்!

வழக்கம்போல கோலியும், டிவில்லியர்ஸும் ஆடினால் வெற்றிபெறலாம் என்கிற கோட்பாட்டின்படியே ஆடவந்தது பெங்களூரு. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி முதலில் அவுட் ஆக, அடுத்து பார்த்தீப் பட்டேல் அவுட் ஆனார். நேப்பாள நாட்டின் லாமிசேன்தான் முதல் ஓவர் வீசினார். பார்த்தீப் பட்டேலின் விக்கெட் அவருக்குத்தான் கிடைத்தது. பெங்களூருவின் முதல் சிக்ஸரை பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் அடித்தார் கோலி. 6 ஓவர்களில் 58 ரன்கள் அடித்திருந்தது பெங்களூரு. பவர்ப்ளே முடிந்தும் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என அடித்துக்கொண்டிருந்தது பெங்களூரு.   லாமிசேனின் ஓவர்களை கோலி, டிவில்லியர்ஸ் இருவருமே அடித்து ஆடவில்லை. லாமிசேன் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய கோலி ஐபிஎல் வரலாற்றில் 34வது அரைசதம் அடித்தார். கோலி-டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. 70 ரன்களில் இருக்கும்போது கோலி அவுட். ஆனால் டிவில்லியர்ஸ் பொறுமை இழக்கவில்லை. 19வது ஓவரில் டெல்லியின் ஆட்டத்தை முடித்தார் டிவில்லியர்ஸ். 37 பந்துகளில் 72 ரன்கள் அடித்து பெங்களூருவை வெற்றிபெறவைத்தார் டிவில்லியர்ஸ். 


பெங்களூருவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிசயங்கள் நிகழவேண்டும். கோலியின் மீது ஐபிஎல் இறக்கம் காட்டவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு