Published:Updated:

"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம்

"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம்

தன்னை பெங்ளுரு அணி ஏமாற்றியதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்

"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம்

தன்னை பெங்ளுரு அணி ஏமாற்றியதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்

Published:Updated:
"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம்

''அணியில் மீண்டும் எடுத்துக்கொள்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பெங்களூரு அணி ஏமாற்றியது'' - அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி, கிரிக்கெட் உலகையே சற்று அதிரவைத்துள்ளது. 

மேற்கு இந்தியதீவுகள் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு ஆண்டுகள் ஆடினார். பிறகு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்தார். 2010-ம் ஆண்டிலிருந்து ஏழு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில்,  ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அதிரடி சிக்ஸர்களை விளாசினார். ஐ.பி.எல் கோப்பையை பெங்களூரு அணி வெல்லவில்லை என்றாலும், கெயிலின் அதிரடியைப் பார்த்தாவது அந்த அணியின் ரசிகர்கள் சற்று ஆறுதலடைவார்கள். கடந்த சீசனில் கெயில் சொதப்ப, நடப்பு தொடரில் அவரை பெங்ளூரு அணி ஏலம் எடுக்கவில்லை. கெயில் ஃபார்ம்-அவுட் என்று கருதி, பெங்களூரு அணி இந்தத் தவற்றைச் செய்தது. 

எனினும், கெயிலை அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. தன்னை ஏலம் எடுத்ததற்காக வீரேந்திர சேவாக்குக்குக் கெயில் நன்றிகூட தெரிவித்திருந்தார். தற்போது, பஞ்சாப் அணிக்காக சிக்ஸரும் பவுண்டரியும் விளாசிவரும் கெயில், நான்கு போட்டிகளில் 272 ரன் குவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 104 ரன் விளாசினார். டி-20 போட்டியில் கெயில் அடித்த 21-வது சதம் இது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இரு அரைச் சதங்களும் கெயில் கணக்கில் உள்ளன. ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தன்னை ஏலம் எடுக்காதது குறித்து கெயில் மனம்திறந்து அளித்துள்ள பேட்டியில், ''பெங்களூரு அணி நிர்வாகிகள், என்னை அணியில் தக்கவைப்பதாகக் கூறினர். பிறகு அது பற்றி என்னிடம் எதுவும் பேசவும் இல்லை... அழைக்கவும் இல்லை'' என்று தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் கெயில் ''என்னிடம் பேசுகையில் 'நீங்கள் நிச்சயமாக பெங்களூரு அணிக்குத் தேவை' என்றார்கள். ஆனால், முதல் நாள் ஏலத்தில் பெங்களூரு அணி உள்பட எந்த அணியும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. நான் தேவையில்லை எனக் கருதினார்கள்போலும். என் சதங்கள் சிக்ஸர்கள் நிறைந்தன. புள்ளிவிவரங்கள் பொய் பேசாது. அப்போது, கரீபியன் லீக், பங்களாதேஷ் லீக் தொடர்கள் எனக்கு இருக்கின்றன என்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. ஆனாலும், நான் பொறுமை காத்தேன். யாருடனும் சண்டைபோட வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் எனக்குள் இல்லை. அடுத்த நாள், பஞ்சாப் அணி இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அடிப்படை விலை என்பதால், சற்று வருத்தம் ஏற்பட்டது. அதேவேளையில், ஐ.பி.எல் தொடரில் ஆடப்போகிறேன் என்கிற மகிழ்ச்சியும் எனக்குள் ஏற்பட்டது. 

அணியில் இடம்பெறுவது, இல்லாமல்போவது எல்லாம் விளையாட்டில் சகஜம்தான். பஞ்சாப் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் தற்போது உருவாகியிருக்கிறது. எனக்குள் இருக்கும் இரு லட்சியங்களில் ஒன்று, பஞ்சாப் அணிக்குக் கோப்பையை வென்று கொடுப்பது. அடுத்தது, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டிஸ் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது. பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மிகுந்த பண்புடன் நடந்துகொள்கிறார்; உற்சாகம்கொள்ளும்விதத்தில் பேசுகிறார். அவர் செம ஸ்வீட் ஐ.பி.எல் கோப்பையை பஞ்சாப் அணி வெல்ல வேண்டும் என்பது அவரின் கனவு. இந்த முறை கோப்பையை பஞ்சாப் அணி வென்றெடுக்க நான் காரணமாக இருப்பேன்'' என்றார். 

ஐ.பி.எல் தொடரில் கிறிஸ் கெயிலின் ஸ்டிரைக் ரேட் 150. ஐ.பி.எல் தொடரில் இதுவரை 6 சதங்களையும் கிறிஸ் கெயில் விளாசியுள்ளார். 10 சீசன்களில் 3,878 ரன்னைக் குவித்துள்ளார். 38 வயதான கெயில் அணியில் இடம்பெற வேண்டுமென்று கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகத்தை வற்புறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சாதனை வீரரை வேதனையில் ஆழ்த்திய பெங்களூரு அணி, அதற்கான விலையையும் கொடுத்துவருகிறது!