Published:Updated:

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

அனைத்து ஷாட்களையும் விளையாடும் பேட்ஸ்மென் நிச்சயம் ஜாம்பவானாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் பிரையன் சார்லஸ் லாரா.

Published:Updated:

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

அனைத்து ஷாட்களையும் விளையாடும் பேட்ஸ்மென் நிச்சயம் ஜாம்பவானாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் பிரையன் சார்லஸ் லாரா.

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

ஸ்பின்னர்களை பிட்ச் ஆஃப் தி பால் சென்று அடிக்க வேண்டும், பவுன்சர்கள் வந்தால் ஹூக் செய்ய வேண்டும், மெதுவாக பந்துகள் வந்தால் பின்கால்களில் சென்று விளையாட வேண்டும், ஆஃப் சைடில் வந்தால் கட் செய்ய வேண்டும், இல்லையேல் கவர் திசையில் விளையாட வேண்டும். பேடில் போட்டால் ஃபிளிக் செய்ய வேண்டும், சரியான நேரத்தில் நகர்ந்து இன்சைட் அவுட் விளையாட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனால் இப்படி அனைத்து ஷாட்களையும் சுத்தமாக, சிறப்பாக விளையாட முடியாது. சிறப்பாக ஹூக் செய்பவர், கட் செய்ய கஷ்டப்படுவார். ஃபிளிக் செய்யும் பேட்ஸ்மென் கவர் டிரைவில் கோட்டை விடுவார். இதெல்லாம் சிறப்பாக செய்தாலும் ஸ்பின்னர் வந்துவிட்டால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடும், நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குமாறாக சுத்தமாக அனைத்து ஷாட்களையும் விளையாடும் பேட்ஸ்மென் நிச்சயம் ஜாம்பவானாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் பிரையன் சார்லஸ் லாரா.  #HBDLARA

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

கிரிக்கெட்டை கொண்டாட்டமாக மாற்றிய பேட்ஸ்மேன் பிரையன் லாராவுக்கு இன்று 50-வது பிறந்தநாள்!

டார்கெட் அதிகமென்றால் பதற்றம், எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தால் பொறுமை என்பது போன்ற ரியாக்ஷன்களைக் குறைவாக கொடுப்பவர் லாரா. பயமா... எனக்கா? என்பதுபோல்தான் இருக்கும் அவரின் அணுகுமுறை. தனது பேட்டிங் திறமைமீது அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு உண்டு. ஒரு உதாரணம் சொல்கிறேன். தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு மிகஅருகில் இருந்தது விண்டீஸ். முதல் இன்னிங்சில் ஃபாலோ ஆணைத் தவிர்க்கவே விண்டீசுக்கு இருபத்து ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. ஃபாலோ ஆன் வந்தால் தோல்வி உறுதி. எதிர்முனையில் இருப்பதோ கட்டக்கடைசி பேட்ஸ்மென். இந்த நிலைமையில் யாராக இருந்தாலும் நிதானமாக இருப்பார்கள், தங்களின் விக்கெட் மிகமுக்கியம் என பொறுமையைக் கடைபிடிப்பார்கள். முடிந்தவரை ஸ்ட்ரைக்கில் இருந்து தடுப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், அந்த நிலையில் லாரா என்ன செய்தார் தெரியுமா?

இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவர் த விக்கெட்டில் வீச, ஸ்டம்பை நோக்கி சின்ன டர்ன், அழகான கவர் டிரைவ், நான்கு ரன்கள். அடுத்த பந்தும் அதேபோல வீச, இறங்கிவந்து லாங் ஆனுக்கு மேலே ஒரு சிக்ஸ். அடுத்த பந்தும் அதேபோல, கொஞ்சம் ஸ்ட்ரெயிட்டாக இன்னுமொரு சிக்ஸ். நான்காவது பந்தில் லைனை விட்டு கொஞ்சம் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை, பெளலர் தலைக்குமேலே சென்று அடிக்க ஒன் பவுன்ஸ் ஓவர் தி ரோப். ஐந்தாவது பந்தில் இன்னுமொரு ஸ்ட்ரெயிட் டிரைவ், ஆறாவது பந்தில் அழாகான லேட் கட் என மேலும் இரண்டு பவுண்டரிகள். ஆகமொத்தம் இருபத்தெட்டு ரன்கள். மூன்று விக்கெட் எடுத்த பெளலர், கொஞ்சம் தப்பினாலும் அணிக்குத் தோல்வி என்பதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி ஒரு முரட்டுத்தன பேட்டிங் பெர்ஃபாமென்ஸ்... அதை வேறுயாராலும் செய்ய முடியாது. இந்த ஓவரில் பந்தைநோக்கி இறங்கியும் வந்தார், பின் சென்று லேட்டாகாவும் விளையாடினார். அந்த ஃபூட் வொர்க் இருக்கிறதே, அதுதான் இவ்வளவு ரன்களுக்கும் காரணமா, லாரா?
 

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara


அந்த இருபத்தெட்டு ரன்கள் எடுத்த ஓவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வழங்கிய ஓவராக உள்ளது. அதற்கடுத்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்த்தது விண்டீஸ். ஆட்டம் டிராவானது. ''நான் கிட்டத்தட்ட அனைத்து பந்துகளையும் ஒரேமாதிரிதான் வீசினேன். ஆனால், அந்த பந்தை எவ்வாறெல்லாம் அடிக்கலாம் என லாரா எனக்கு சொல்லிக்கொடுத்தார். முதலில் இரண்டு பவுண்டரிகளுக்கு பின்னர் தடுப்பாட்டம் ஆடுவார் என நினைத்தேன். அவர் அடித்த திசையில் ஆட்களை நிற்கவைத்தேன். ஆனால், அவரின் மூளையிலிருந்ததோ வேறு எண்ணங்கள் என்பதை கடைசி பந்தில்தான் உணர்ந்தேன்” என்று போட்டிக்குப் பின்னர் சொன்னார் ராபின் பீட்டர்சன். ஒரு குறிப்பிட்ட வகையான பந்தை வீசும்போது, பேட்ஸ்மேனால் குறிப்பிட்ட ஷாட்களைத்தான் அடிக்க முடியும் என்றில்லை, நீங்கள் சரியாக விளையாடினால் அந்தப் பந்தை எந்த திசையிலும் அடிக்கலாம் என விளையாடிக் காட்டியவர் பிரையன் லாரா.

ஒரு அணி தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே இருக்கும்போது, எந்தவொரு வீரராலும் உற்சாகமாக விளையாட முடியாது. விண்டீஸ் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தபோது, தனிநபராக அந்த அணியை தூக்கிநிறுத்தப் போராடியவர் லாரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இருநூறுகள் உள்பட  கிட்டத்தட்ட அறுநூற்று ஐம்பது ரன்களை விளாசினார். ஆனால், அணிதான் மூன்றுக்கு பூஜ்யம் என்று தோற்றுப்போனது. அவர் விளையாடிய 131 டெஸ்ட் போட்டிகளில் 61 போட்டிகளில் விண்டீஸ் தோற்றுள்ளது என்பதே, அவர் விளையாடிய சூழலைச் சொல்லும்.  முதல்தர கிரிக்கெட்டில் ஐநூற்று ஒன்று நாட் அவுட், டெஸ்ட் கிரிக்கெட்டில் நானூறு ஒன்று நாட் அவுட் என மாபெரும் ரன்களை தனது அதிகபட்ச ரன்களாக தன் வசம் வைத்துள்ளார் லாரா. 

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara



எந்தவீரர் சிறப்பாக விளையாடினாலும் அதனைப் பாராட்டக்கூடிய பண்புடையவர். 2015 உலகக்கோப்பையின்போது, காலிறுதியில் பாகிஸ்தானின் வாஹாப் ரியாஸ் அருமையான பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை திணறடித்தார். அப்போது அவரின் நடத்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது, அவரின் விளையாட்டை பாராட்டி அபராதத்தை தான் செலுத்துவதாகச் சொன்னார் லாரா. நேர்த்தியான கிரிக்கெட்டின்மீது அவர் வைத்துள்ள நேசத்துக்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். 
பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்த பிரையன் லாரா ஓய்வுபெறும்போது கடைசியாக ரசிகர்களைப் பார்த்து ''நான் உங்களை மகிழ்வித்தேனா?” என்று கேட்டார். அதற்கு மைதானமே அதிருமளவுக்கு எழுந்த ஆரவாரம் பதில்சொன்னது.