Published:Updated:

சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

Published:Updated:
சன்ரைசர்ஸ் போட்ட ஊசி வெடியில் சிதறிப்போன ரோஹித் அண்ட் கோ! மும்பை ஐந்தாவது தோல்வி! #MIvsSRH

திருமண நாளன்று, மனைவியின் பிறந்தநாளன்று நடக்கும் போட்டிகளில் எல்லாம் ஒட்டுமொத்த டீமுக்கும் சேர்த்து ஒற்றை ஆளாய் அடித்து நொறுக்குவார் ரோகித். நேற்றோ சச்சினின் பிறந்தநாள். மேலும், இந்த சீசனிலேயே மும்பை முதல்முறையாக சேஸிங் செய்யப்போவது, எதிரணியின் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர்  இடம்பெறாதது, மும்பை அணியில் பென் கட்டிங்கை எடுக்காதது போன்ற பாஸிட்டிவ் குறியீடுகளை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து, வடக்குப்பட்டி ராமசாமியிடம் பணம் வாங்கச் செல்லும் கவுன்டமணியைப் போல் `சக்ஸஸ்' என சந்தோஷமாய் டி.வி-யின் முன்னால் அமர்ந்திருந்தார்கள் மும்பை  ரசிகர்கள். ரிசல்ட்? #MIvsSRH

டாஸ் `ஜெயித்து' பவுலிங்கை தேர்ந்தெடுத்த ரோகித் சர்மா, "இங்கு எத்தனை ரன்கள் அடித்தாலும், அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம்! ஆதாலால், பேட்டிங் செய்வீர்' என காலரை தூக்கிவிட்டு ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். தவானும் கேன் வில்லியம்சனும் ஹைதரபாத் அணிக்காக ஓபன் செய்தனர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே பாயின்ட் திசையில் இரண்டு பவுண்டரிகளை  வில்லியம்சன் `சலுப்' என விலாச, `பாயின்ட், பாயின்ட்னு ஏன்டா பாயின்ட்டை ஞாபகப்படுத்திறீங்க' என நொந்துபோனார் ரோகித். இரண்டாவது ஓவரில் பொறுப்பாக எதிர் டீமுக்கு எக்ஸ்ட்ரா ரன்களை படையல் வைத்துவிட்டு, அடுத்த பந்திலேயே தவானை தினறடித்தார் மெக்லெனகன். அவர் வீசிய பந்து, தவானின் பேட்டில் இன்சைடு எட்ஜாகி பின்னங்காலை பதம் பார்த்தது. அதுவரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த தவான், நிலைகுலைந்துப் போனார். அடுத்து மெக்லெனகன் வீசிய பந்து பேட்டில் பட்டு, காலில் பட்டு கடைசியாக ஸ்டம்பிலும் பட, தவான் - 5 (6) பெவிலியனுக்குத் திரும்பினார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் சஹாவும் - 0 (2) கீப்பர் கையில் கேட்ச் கொடுத்துவிட்டு, தவானைவிட வேகமாய் பெவிலியனுக்குள் நுழைந்தார்! 

சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தும், தான் சந்தித்த முதல் பந்தையே அநாயசமாக பவுண்டரிக்கு திருப்பி நம்பிக்கையளித்த மனீஷ் பாண்டே,  அடுத்து மெக்லெனகன் வீசிய ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை அறைந்து அணிக்கு குளுக்கோஸ் ஊட்டினார். மனீஷ் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து `இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் வேற லெவல்ல இருந்திருப்பார்' என வர்ணனையாளர்கள் சொல்லிமுடிக்க, எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் மனீஷ் - 16 (11). அவர் ஹர்திக் பாண்டியா அவுட் சைட் ஆஃபில் வீசிய பந்தை, ஓங்கி அடிக்கப்போய் ரோகித் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர் ப்ளேயின் கடைசி ஓவரில், கேன் வில்லியம்சன் சூர்யகுமாரிடம் பந்தை தட்டிவிட, சூர்யகுமார் பந்தைப் பிடித்து ஷகிப்பின் திசையிலுள்ள பெயில்ஸை தட்டிவிட்டார். ஷகிப் - 2 (4) ரன் அவுட்! அப்போது விழுந்த ஹைதராபாத் அணி அதன் பின் எழவேயில்லை. பவர் ப்ளேயின் முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது சன்`ரைஸர்ஸ்'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எட்டாவது ஓவரின் முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு, நடுவரின் தீர்ப்பைக்கூட எதிர்பார்க்காமல் மட்டையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு கிளம்பினார் கேன் வில்லியம்சன் - 29 (21). `புலிக்குட்டி' பாண்டியா தனது இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார். ஸன்ரைசர்ஸ் டக்கவுட்டில் பேரமைதி. வெறுப்பில் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.  நம்பிக்கை நட்சத்திரம் மார்க்கண்டேவுக்கு முதல் ஓவர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. நபியும் யூசுப்பும் ஆளுக்கொரு பவுண்டரிகளை  பரிசாக வழங்கினர். அதிலும், யூசுப் ஆடிய பேடில் ஸ்வீப், சச்சினுக்கான பிறந்தநாள் பரிசு. தொடர்ந்து `பூனைக்குட்டி' பாண்டியாவும் மார்கண்டேவும் வீசிய நான்கு ஓவர்களில், ரன்கள் எடுக்கத் தடுமாறியது ஹைதராபாத். மார்கண்டே வீசிய கூக்ளியில் க்ளீன் பவுல்டான நபி - 14 (10), `யார் சாமி இவன்' என பார்த்தவாறு விடைபெற்று கிளம்பினார். அடுத்து பும்ரா பந்தில் ரஷித் - 6 (9) அவுட்டாக, மார்கண்டே பந்தில் தம்பி - 3 (6) அவுட்டாக, முஸ்தபிசுர் பந்தில் கவுலும் -2 (9)  யூசுப்பும் - 29 (33) அவுட்டாக, 18.4 ஓவர்களில் வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவட்டானது சன்ரைசர்ஸ்.

`118-தான் டோட்டல். ரொம்ப டைம் எடுத்துக்காதீங்க. சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க' என லீவிஸிடமும் சூர்யகுமாரிடமும் `படையப்பா' படத்தில் வரும் லட்சுமியைப் போல் சொல்லி அனுப்பினார் ஹெட்கோச் ஜெயவர்த்தனே. புவனேஷ்வருக்கு மாற்றாக களமிறங்கிய சந்தீப், முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதைப் பார்த்து கொஞ்சம் ஜெர்க்கான மும்பை ரசிகர்கள், ஒருநிமிடம் ரோகித்தின் சென்டிமென்ட்டை நினைத்துப்பார்த்துவிட்டு `சக்ஸஸ்' என ஆசுவாசமானார்கள். நபி வீசிய அடுத்த ஓவரில் வெறும் ஆறு ரன்களே எடுத்தனர். மறுபடியும் ஜெர்க் ஆனவர்கள், `சின்ன ஸ்கோர்தானே பொறுமையா ஆடுவோம். என்ன அவசரம்' என மனதை தேற்றிக்கொண்டார்கள். மூன்றாவது ஓவரில் சந்தீப் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டு கெத்துக் காட்டினார் லீவிஸ். ஆனால், அதே ஓவரில் சந்தீப் ஸ்விங்குக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். லெக் சைடு ஆடப்போய் லீடிங் எட்ஜாகி, பாயிண்ட் திசையில் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு மூட்டை முடிச்சோடு கிளம்பினார்! ஒரே குழப்பமா இருக்குல்ல? பார்க்கவும் அப்படித்தான் இருந்தது.

லீவிஸ் - 5 (9) போனால் என்ன, `இஷான் கிஷன் இருக்காப்டி. இன்னைக்கு பாய்ஞ்சு பாய்ஞ்சு கீப்பிங் பண்ணாப்டி' என வான்கடே மைதானமே நம்பிக்கையோடு இருந்தது. ஆனால், நபி வீசிய அடுத்த ஓவரிலேயே பந்தை கொடியேற்ற நினைத்து ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து கிலி கிளப்பினார் கிஷன் - 0 (3). பவர் ப்ளேயில் சர்க்கிளுக்கு வெளியே நிற்பவரின் கையிலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆவதெல்லாம் ஏலியன் லெவல். அப்போதும் மும்பை ரசிகர்கள் மனம் தளரவில்லை. ``ரோகித் இருக்காப்டி, இன்னைக்கு செமையா கேப்டன்சி பண்ணாப்டி' என நம்பிக்கையோடு இருந்தனர். பவர் ப்ளேயின் கடைசி ஓவரை ஷகிப் அல் ஹசன் வீச, அந்த ஓவரில் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த தவானிடம் கேட்ச் கொடுத்து ஷாக் கொடுத்தார் ரோகித் - 2 (6). மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மனதில் கட்டிவைத்திருந்த கோட்டையை வெங்காய வெடி வீசி தகர்த்தார் கேன் வில்லியம்சன். `எனக்கு இப்பவே குப்புனு வியர்க்குதே' என நெஞ்சைப் பிடித்தார்கள் மும்பை அணியினர். பவர் ப்ளேயின் முடிவில் வெறும் 22 ரன்களே எடுத்து 3 விக்கெட்களை இழந்து இலக்கை நோக்கி தவழ்ந்துகொண்டிருந்தது.

முன்பெல்லாம் பொல்லார்டு இறங்கினால் எதிரணி ரசிகர்கள்தான் பயப்படுவார்கள். இப்போது, மும்பை ரசிகர்களே பயப்படுகிறார்கள். அதைப் புரிந்திருக்கும் ரோகித் பொல்லார்டுக்குப் பதிலாக `பூனைக்குட்டி' பாண்டியாவை களமாட அனுப்பினார். அதற்கேற்றார்போல், சூர்யகுமார் - க்ருணால் பாண்டியா ஜோடியின் ஆட்டம், நிறையவே நம்பிக்கை தந்தது. நபி ஓவரில் சூர்யகுமார் இரண்டு பவுண்டரிகளை விளாசி, பிரஷரைக் குறைத்தார். பதிலுக்கு `பூனைக்குட்டி' பாண்டியா, சித்தார்த் கௌல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து மாஸ் காட்டினார். அந்த ஓவரின் முதல் பந்தில் க்ருணால் அடித்த கவர் ஷாட், தாறுமாறு தக்காளிச்சோறு ரகம். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கொஞ்சகொஞ்சமாய் உயர்த்திக்கொண்டு வந்தனர். மறுபடியும் விழுந்தது அந்த இடி. 12-வது ஓவரில் ரஷீத் வீசிய பந்தில் பேக்ஃபுட் ஆடப்போய் பேடில் வாங்கினார் க்ருணால். `ஹவ்ஸாட்ட்ட்ட்ட்...' என அலறியும் அம்பயர் ஒற்றைக் கையைத் தூக்காததால், தன் இரண்டு கையைத் தூக்கி ரிவ்யூ சென்றார் கேன் வில்லியம்சன். ரிவ்யூவில் ஒரே சிவப்புக் கலராய் தெரிய, பெவிலியனுக்குத் திரும்பினார் `பூனைக்குட்டி' பிரதர் - 24 (20). கடைசியாக, மும்பை ரசிகர்கள் பயந்ததுபோன்றே பொல்லார்டு களமிறங்கினார். `அடுத்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்காப்டி. இன்னைக்கு ரெண்டு விக்கெட் எடுத்தாப்டி. பேட்டிங்கும் பிரிச்சுருவாப்டி' என கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு கூச்சலிட்டுக் கொண்டிருந்தது வான்கடே மைதானம். அப்போதுதான் மும்பை ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்த அந்த அதி அற்புதமான தருணம் நிகழ்ந்தது. பொல்லார்டு - 9 (6) அவுட் ஆனார்.

மும்பையின் நம்பிக்கை நாயகன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய அடுத்த ஓவரிலேயே தம்பியின் பந்தில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சூர்யகுமார் யாதவ் - 34 (38). நல்ல ஷாட், ஃபீல்டரின் கையிலேயே விழுந்தது! கவுல் வீசிய அடுத்த ஓவரில் மெக்லெனகன் - 0 (2), மார்கண்டே - 1 (2) இருவரும் காலியாகினர். ஹர்திக் பாண்டியா தனியாளாக போராடிக்கொண்டிருந்தார். அவரை ஆடவைத்து மெய்டன் ஓவரெல்லாம் வீசினார்கள். ஆனாலும், மனம் தளராமல் போராடிக் கொண்டிருந்தார். இறுதியாக, ஒரு மாவீரனின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆம், 19 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹர்திக் (எ) `புலிக்குட்டி' பாண்டியா! எல்லா மேட்சும் கடைசி ஓவர் வரைச் சென்று ஜெயிப்பதுபோல் தோற்று ரசிகர்களை ஏமாற்றுவார்கள் ரோகித் அண்ட் கோ. இந்தமுறை, `ஜெயிக்கலாம் வேணாம், கடைசி ஓவர் வரை வந்தாலே போதும். பும்ரா இருக்காப்டி, அடிப்பாப்டி' என வேண்டிக் கொன்டிருந்த ரசிகர்களை, 18.5 ஓவர்களில் ஆல்-அவுட்டாகி மறுபடியும் ஏமாற்றியது மும்பை. "ஜெயிச்சுமுடிச்சுட்டு சச்சினுக்கு கேக் ஊட்டுவீங்கன்னு பார்த்தால், இப்படி தோத்து அல்வா ஊட்டிட்டீங்களேடா' என சொல்லிவிட்டு நகர்ந்தார் வடக்குப்பட்டி ராமசாமி! ஊஊஊ...

ரஷீத் கானுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.சன்ரைசர்ஸ் பவுலிங் யூனிட், கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப்பின் இன்னிங்ஸ், தவானின் இரண்டு அட்டகாசமான கேட்ச்கள் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism