Published:Updated:

ஐபிஎல்: ஆஸி வீரர் கிளன் ரூ.5.32 கோடிக்கு ஏலம்!

ஐபிஎல்: ஆஸி வீரர் கிளன் ரூ.5.32 கோடிக்கு ஏலம்!
ஐபிஎல்: ஆஸி வீரர் கிளன் ரூ.5.32 கோடிக்கு ஏலம்!
ஐபிஎல்: ஆஸி வீரர் கிளன் ரூ.5.32 கோடிக்கு ஏலம்!

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் ஆறாவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில்,  ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்லை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5.32  கோடிக்கு ஏலம் எடுத்தது. 

ஐபிஎல் டி20 தொடரின் ஆறாவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று  நடந்தது. ஏலப் பட்டியலில் 108 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். நேற்றைய ஏலத்தில்  அதிகபட்சமாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் (24) ரூ.5.32 கோடிக்கு  ஏலம் போனார். அவரை ஏலம் எடுப்பதில் பல்வேறு அணிகள் கடும் போட்டியிட்டன.  இறுதியில் மும்பை அணி, கிளனை ஏலத்தில் எடுத்தது.

இலங்கை ஆல் ரவுண்டர் திசரா பெரேராவை, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.3.5  கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆர்.பி.சிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.2.1  கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேப்போன்று தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜோஹன்  போதா, ரூ.2.3 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

##~~##
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி  பாண்டிங் ஆகியோரை ஏலம் எடுப்பதில் அணிகள் இடையே அவ்வளவாக ஆர்வம்  இல்லை. இதனால் இவர்கள் ரூ.2.1 கோடிக்கு மட்டுமே ஏலம் போனார்கள். ஆஸ்திரேலிய வீரர் லூக் போமெர்ஸ்பேச் ஸி1.5 கோடிக்கு ஏலம் போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அவரை ஏலம் எடுத்தது.
உள்நாட்டு வீரர்கள் ஜெயதேவ் உனாகத், பங்கஜ் சிங் ஆகியோர் நேற்றைய ஏலத்தில்  நல்ல விலை பெற்றனர். ஜெயதேவ் ரூ.2.7 கோடிக்கும், பங்கஜ் ரூ.53 லட்சத்துக்கும்  பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். மற்றொரு இந்திய வீரரான மன்ப்ரீத் கோனி  ரூ.2.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.