Published:Updated:

4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!

Vikatan Correspondent
4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!
4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!
4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!

மொஹாலி: மொஹாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

மொஹாலியில் நேற்று நடைபெற்ற 4 ஆவது ஒரு நாள் போட்டியில்ம, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 37 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இயான் பெல் 10 ரன்களில் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின்னர் கேப்டன் அலெஸ்டர் குக்கும், பீட்டர்சென்னும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.அரைசதம் அடித்த குக் 76 ரன்களில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து களமிறங்கிய இயான் மோர்கன், மூன்றே ரன்களில் வெளியேறினார்.

##~~##
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி,நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீர் 10 ரன்களும், ஷர்மா 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராத் கோஹ்லி 26 ரன்களும் எடுத்திருந்தார். யுவராஜ் சிங் 3 ரன்களுடனும், தோனி 19 ரன்களுடனும் வெளியேறினர்.
அதிரடியாக விளையாடிய ரெய்னா அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். 47.3 வது ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.