Published:Updated:

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

Published:Updated:

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?!

``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்?

2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி அது. இத்தாலியும், ஃபிரான்ஸும் உலகக்கோப்பையை வெல்ல இறுதி நிமிடங்களில் மோதிக்கொள்கின்றன. 1-1 என கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்க, கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆட்டத்தில் அனல் பறக்கிறது. வீரர்கள் வெற்றிக்காக வெறிகொண்டு ஆடுகிறார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடக்கிறது. ஃபிரான்ஸின் நம்பர்- 1 வீரரும், பல கோடி குழந்தைகளின் ரோல் மாடலுமான ஜினிடின் ஜிடேன், இத்தாலி வீரர் மார்க்கோ மடரஸியை தலையால் முட்டி கீழே தள்ளுகிறார். மார்க்கோ மடரஸி தன் தங்கையை தவறான வார்த்தை சொல்லிவிட்டார் என்பதற்காகத்தான் முட்டித்தள்ளினார் ஜிடேன். ஆனால், பல கோடி பேர், அதுவும் சிறு மனங்கள் கால்பந்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நாம் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த ஜிடேன் `குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குற்ற உணர்வோடு மன்னிப்புக் கேட்டார். அதுதான் ஒரு மனிதனின் மனப் பக்குவம்!  

அதையேதான் இப்போது ஸ்மித்தும், பேங்க்ராஃப்ட்டும் செய்திருக்கிறார்கள். மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய தென்னாப்ரிக்க கேப்டன் ஹேன்சி குரோனேயேவும் மன்னிப்பைதான் முன்வைத்தார். ஆனால், மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய வீரர்கள் அசாருதின், ஜடேஜா தொடங்கி சமீபத்தில் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய ஶ்ரீசாந்த் வரை யாருமே, மன்னிப்பு என்கிற வார்த்தையை எங்கேயுமே பயன்படுத்தவில்லை. குழந்தைகளுக்கு நாங்கள் தவறான முன் உதாரணமாகிவிட்டோம் என்கிற குற்ற உணர்வு இல்லை. ஏனென்றால் நாம் நம்முடைய குடும்பு அமைப்புக்குத் தரும் முக்கியத்துவம் அவ்வளவுதான்.

தென்னாப்ரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வந்திறங்கியதுமே ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவரும் செய்தியாளர்களைத் தனித்தனியாக சந்தித்தினர். ஸ்மித் தன் தந்தையோடு செய்தியாளர்களை சந்திக்க, பேங்க்ராஃப்ட் தன் அம்மாவோடு செய்தியாளர்களைச் சந்தித்தார். காரணம் தன்னுடைய குடும்பத்துக்கும், தன்னை வளர்த்தவர்களுக்கும் மிகப்பெரிய துரோகமும், தவறும் செய்துவிட்டவர்களாக அவர்கள் உணர்ந்துதான். முதலில் குடும்பத்திடம் மன்னிப்புக்கேட்டு, குடும்பத்தின் துணையோடு செய்தியாளர்களைச் சந்தித்தனர் அந்த ஆஸ்திரேலியர்கள்.

இந்தியாவில்தான் குடும்பம் என்னும் கட்டுமானம் சிதையாமல் இருப்பதாக எண்ணுகிறோம். அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் எல்லாம் குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நினைக்கிறோம். அது மிகமிகத் தவறு என்பதற்கான உதாரணங்கள்தான் ஸ்மித், பேங்க்ராஃப்ட், ஜிடேன் சர்ச்சைகள். இவர்கள் ஏன் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியம். நாளைய தலைவர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் நாட்டை வழி நடத்தப்போகிறவர்களும், நாட்டுக்குப் பெருமை சேர்க்கப்போகிறவர்களும் அவர்கள்தான். அவர்களுக்கு நல்ல ரோல் மாடல்கள் இல்லை என்றால் நாளைய சமுதாயமும் சீரழியும். அதைச் செய்துவிட்டதால்தான் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறார்கள்.

`குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக இருக்க வேண்டும்’ என்பதுதான் நாம் நம்முடைய கோலிக்களிடமும், தோனிக்களிடமும் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு. இதோ ஐ.பி.எல் தொடங்குகிறது. ஒவ்வொரு அணிகளும் வெற்றிக்காக வெறிகொண்டு மோதலாம் தவறில்லை. ஆனால், எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் ஆட்டமாக அதுமாறிவிடக்கூடாது. ஸ்பாட் ஃபிக்ஸிங் ஏதோ ஒரு முறை நடந்துவிட்டது என்பது அல்ல. எது எப்போது வேண்டுமானாலும், எந்த அணியில் வேண்டுமானாலும், எந்த வீரரிடம் வேண்டுமானாலும் நடக்கலாம்.

விளையாட்டு வீரர்களே... உலகின் பெருமைமிகு விளையாட்டுத் தூதுவர்களே... குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மனதில்வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் எப்போதும் நம்மை மன்னிக்கத் தயராகயிருக்கிறார்கள். நாம்  அவர்களுக்கு நல்ல ரோல் மாடலாக இருக்கிறோமா?!