Published:Updated:

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

Published:Updated:

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

ஸ்மித், வார்னர் வெளியே... லேமன் உள்ளே... பதவியைக் காப்பாற்றிய அந்த 6 வார்த்தை! #BallTampering #Sandpapergate

``வேற ஒண்ணும் இல்லை. டுவெல்த் மேன்கிட்ட பீட்சா கொண்டு வரச் சொல்லிருப்பாரு...!’’ - இது, பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என விளக்கம் சொன்னபோது சோசியல் மீடியாவில் வெளியான பதிவுகளின் ஒரு சாம்பிள்.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். ஒன்பது மாதங்களுக்கு பேங்க்ராஃப்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது. `எல்லாம் சரி, பயிற்சியாளர் டேரன் லேமனுக்குத் தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என, கெவின் பீட்டர்சன் முதல் சாமானிய ரசிகன் வரை கருத்துத் தெரிவித்தனர். 

`இது leadership group எடுத்த முடிவு. இதற்கும் பயிற்சியாளருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என ஸ்டீவ் ஸ்மித் விளக்கம் சொன்னபோதும், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், பேங்க்ராஃப்ட் பேன்ட் பாக்கெட்டிலிருந்து மஞ்சள் நிற உப்புப் பேப்பரை எடுப்பது டிவியில் தெரிகிறது; டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து அதைக் கவனித்துக்கொண்டிருந்த டேரன் லேமன் உடனடியாக, dug out-ல் இருந்த ட்வெல்த் மேன் ஹேண்ட்ஸ்கோம்பிடம் வாக்கி டாக்கி வழியாக ஏதோ சொல்கிறார். ஹேண்ட்ஸ்கோம்ப் உடனடியாக களத்துக்குச் சென்று பேங்க்ராஃப்ட்டிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் Ball Tampering செய்வதை நிறுத்தினார். அதற்குள் களத்தில் இருந்த அம்பயர்களும் ஆஸ்திரேலிய கேப்டனிடம் பேச ஆரம்பித்திருந்தனர். 

இந்த ஒட்டுமொத்த வீடியோவையும் கிரிக்கெட் உலகம் முழுவதும் வைரலாகி விட்டது. `லேமனுக்கு எதுவும் தெரியாதாம்...’ என்ற தொனியில் கெவின் பீட்டர்சனும், `மூன்று பேருக்கும் மட்டும்தான் தெரியுமாம்’ என மைக்கேல் வாகனும் ட்வீட் தட்டினர். ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூட, லேமனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை எனப் பூதாகரமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.  

ஆனால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் மட்டும் லேமன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ``களத்தில் என்ன நடந்தது என்பதை லேமன் அறிந்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போதுதான் ரிலாக்ஸாக இருக்கிறேன்’’ என்றார் ஆலன் பார்டர். அவரைப் போலவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தங்கள் பயிற்சியாளரை நம்பியது. ஸ்மித், வார்னர், பேங்க்ராஃப்ட் மீது நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டியது. ஆனால், லேமன் விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிதானமாக இருந்தது. கடைசியில், இந்தப் பிரச்னையில் லேமனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

பால் டேம்பரிங் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் ஐயன் ராய் தலைமையிலான விசாரணைக் குழு தென்னாப்பிரிக்கா விரைந்தது. கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் வீரர்கள், பயிற்சியாளரிடம் விசாரணைக் குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது. விசாரணையில், களத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல்தான் லேமன், வாக்கி டாக்கியில் ஹேண்ட்ஸ்கோம்ப்பிடம் கேட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

``வீடியோவைப் பார்த்த அனைவருக்கும், இந்த விவகாரத்தின் பின்னணியில் லேமன் இருப்பது போலத் தெரியும். ஆனால், நடந்தது இதுதான். களத்தில் ஏதோ விபரீதம் நடப்பதைப் புரிந்த லேமன் உடனடியாக வாக்கி டாக்கி மூலம் ஹேண்ட்கோம்பிடம், `What the f*** is going on?’ எனக் கத்தியுள்ளார். பின் உடனே `என்ன நடக்கிறது என்பதைப் பார்’’ என உத்தரவிட்டுள்ளார். லேமன் என்ன பேசினார் என்பதை மற்றவர்களிடமும் விசாரித்தோம். அவர் இந்த வார்த்தைகளைத்தான் பிரயோகப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, அடுத்த டிரிங்ஸ் பிரேக்கின்போது `என்ன நடக்கிறது’ என ஒவ்வொரு வீரரிடமும் டேரன் கேட்டுள்ளார் ’’ என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்தார்.

தடை விதிக்கப்பட்ட வீரர்கள் மூவரும் ஆஸ்திரேலியா வந்துவிட்டனர். வார்னர் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மேக்ஸ்வெல், ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மூவரும் தென்னாப்பிரிக்கா விரைந்து விட்டனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து ஸ்மித்தை அழைத்துச் சென்ற விதம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு பரவலாக பாராட்டு பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் இயல்புநிலை திரும்பிவிட்டது.