Published:Updated:

WC: பெங்களூருவில் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

WC: பெங்களூருவில் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

பெங்களூரு, பிப்.24,2011

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். ##~~## 
 
உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் லீக் ஆட்டம் வருகிற 27ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

மொத்தமுள்ள 45,000 டிக்கெட்டுகளில் இதுவரை 1000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், குறைந்த அளவிலேயே டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் புகார் தெரிவித்தனர். 

அடுத்த கட்டுரைக்கு