Published:Updated:

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

Published:Updated:
``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன்.

``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?''

``நிச்சயமா இல்லை. நான் மைதானத்துல நுழையும்போது ஒரு ஓவருக்கு 10 ரன்னுக்குமேல அடிச்சாதான் ஜெயிக்க முடியும்கிற சூழல். `முதல் மேட்ச் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் ஃபைனல் மேட்ச். இந்த மேட்ச்ல ஆடி ஜெயிச்சிக்கொடுத்தா ரொம்ப ஸ்பெஷலாயிருக்கும்'னு எனக்குள்ள ரொம்ப மோட்டிவேட்டான ஃபீலிங்கோடுதான் ஆட வந்தேன்.

நான் பேட்டிங்குக்கு வந்தது 13-வது ஓவர்ல. நல்லா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் பண்ணிட்டுத்தான் இருந்தேன். ஆனா, 18-வது ஓவர் ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை. எப்பவுமே ஒரு டாட் பால் விழுந்துச்சுன்னா, அடுத்த பால் சிங்கிள் ஆடுவேன். கேப்ல தட்டிவிடுவேன். ஆனா, அன்னிக்கு எதுவுமே வொர்க்-அவுட் ஆகலை. அடுத்த பால் நிச்சயம் அடிப்பேன்கிற ஃபீலிங்கோடு ஆடும்போது, அடுத்தடுத்த பாலும் அடிக்க முடியாம போனதும் எனக்கே பிரஷராகிடுச்சு. ஆனா, தினேஷ் கார்த்திக் அடிச்சு இந்தியா ஜெயிச்சதுல ரொம்ப சந்தோஷம். பர்சனலா, எனக்குக் கிடைச்ச நல்ல வாய்ப்பை மிஸ்பண்ணிட்டேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாயிருக்கு.''

``தொடர்ந்து டாட் பால்ஸ் விழும்போது தினேஷ் கார்த்திக் என்ன சொன்னார்?''

``தமிழ்நாடு டீம்ல நான் எப்படி ஆடுவேன்னு தினேஷ் கார்த்திக்குத் தெரியும். அதனால, அப்ப அவர் மென்டலா, டெக்னிக்கலா என்ன பண்ணணும்னு சொன்னார். `பிரஷர் ஆகாதீங்க'னும் சொன்னார்.'' 

``மேட்ச் முடிஞ்சதும் கேப்டன் ரோஹித் ஷர்மா எதுவும் பேசினாரா?''

`` `ஒவ்வொரு கிரிக்கெட்டரும் தங்களோட கரியர்ல இப்படி ஒரு சூழலைச் சந்திச்சுட்டுத்தான் வந்திருப்பாங்க. அதனால, நடந்ததை நினைச்சு கவலைப்படாத'னு சொன்னார். `இந்த அனுபவத்தை எடுத்துக்கிட்டு அடுத்தடுத்த மேட்ச்ல எப்படி பர்ஃபார்ம் பண்றதுன்னு யோசி' என்றார்.''

``ஃபைனலுக்கு முன்னாடி பாம்பு டான்ஸ் ஆடி பங்களாதேஷ் அலப்பறை பண்ணாங்க. அந்த டீமோட ஆட்டத்தை அடக்கணும்னு எதுவும் டீம்ல பேசிக்கீட்டீங்களா?'' 

``பங்களாதேஷைப் பற்றி தனியாலாம் எதுவும் பேசல. `இந்தியாவுக்காக ஆடுறோம். இந்தியா ஜெயிக்கணும்'கிற எண்ணம்தான் எங்களுக்குள்ள இருந்துச்சு. பங்களாதேஷா இருந்தாலும் சரி, பாகிஸ்தானா இருந்தாலும் சரி, இந்தியா ஜெயிக்கணும்கிறதுலதான் எங்க கவனம் இருக்கும்.''

``27 வயசுலதான் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைச்சிருக்கு. ரொம்ப லேட்டா வந்துட்டோம்னு ஃபீல்

பண்றீங்களா?''

``இப்ப இந்தியாவுக்காக ஆட ஆரம்பிச்சுட்டேன்னு சந்தோஷப்படுறேன். என்னோட கரியர்ல முக்கியமான நேரத்துல முட்டியில ஆபரேஷன் பண்ணவேண்டியதாப்போச்சு. ஆஸ்திரேலியா `ஏ' டீமுக்கு எதிரான போட்டியில் கிளம்பும்போதுதான் இப்படி ஒரு சூழல். ஆபரேஷன் முடிஞ்சி கிட்டத்தட்ட ஆறு மாசம் பேட்டையே தொட முடியலை. அதுலயிருந்து மீண்டு தமிழ்நாடு அணி, ரஞ்சி டிராஃபி, தமிழ்நாட்டுக்கு கேப்டன்னு விட்ட இடத்துலயிருந்து திரும்ப வந்தேன். அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ஒவ்வொரு கட்டத்துலயும் சூப்பரா பர்ஃபார்ம் பண்ணித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்.''

``முதல்முறையா இந்திய அணிக்குள்ள மூன்று தமிழ்நாட்டு வீரர்கள். நீங்க, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர்னு எப்படி இருந்து அந்த அனுபவம்?''

``ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்துச்சு. மூணு பேருமே நல்லா விளையாடினோம்கிறதுல ரொம்ப சந்தோஷம். மூணு பேருமே கன்சிஸ்டென்ட்டா இருந்தோம். இவ்வளவு வருஷ கடுமையான உழைப்பாலதான் இங்க வந்திருக்கோம்கிறதை மூணு பேருமே நிரூபிச்ச மாதிரிதான் இந்த சீரிஸை நான் பார்க்கிறேன்.''

``உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?''

``அப்பா, விளம்பர நிறுவனம் வெச்சிருக்கார். அம்மா, வீட்டைப் பார்த்துக்கிறாங்க. அண்ணன், தனியார் நிறுவனத்துல வேலைபார்க்கிறார்.''

``அடுத்தது என்ன?''

``ஐ.பி.எல்-ல டெல்லி அணிக்காக விளையாடப்போறேன். ரொம்ப பாசிட்டிவா இருக்கேன். நிறைய ரன், விக்கெட்கள் எடுக்கணும். டீம் ஜெயிக்கணும். இப்போதைக்கு அதுதான் என் ப்ளான்.''