Published:Updated:

`பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்!’ - ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை #SAvAUS

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Photo Credit: Twitter/ICC

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட், மஞ்சள் நிறத்தாலான ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், பந்தைச் சேதப்படுத்தியதை ஸ்மித் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித் மற்றும் இந்த செயலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர். அதனால், டிம் பெயின் கேப்டனாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. 
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித்துக்கு போட்டி ஊதியம் முழுவதையும் அபராதம் விதித்துடன், ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதித்துள்ளது. அதேபோல், பந்தைச் சேதப்படுத்திய கேமரூன் பான்கிராப்டுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 75 சதவிகிதம் அபராதமும், 3 டி மெரிட் புள்ளிகளையும் ஐசிசி வழங்கியுள்ளது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.