Published:Updated:

WC: கென்யாவை மிக எளிதில் வென்றது பாகிஸ்தான்

ஹம்பன்டோட்டா, பிப். 23,2011

உலக கோப்பை கிரிக்கெட் ஏ பிரிவின் லீக் ஆட்டத்தில் கென்யாவை 205 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது பாகிஸ்தான். ##~~##

இலங்கையின் ஹம்பன்டோட்டா மைதானத்தில் இன்று நடந்து முடிந்த போட்டியில், 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கென்யா அணி 112 ரன்களில் சுருண்டது.

அந்த அணியில் ஓபுயா 47 ரன்கள் சேர்த்தார். ஏனையோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். நான்கு வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அப்ரிதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமர் குல் 2 விக்கெட்டுகளையும், ஹஃபீஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் உமர் அக்மல் 71 ரன்களையும், மிஸ்பா உல் ஹக் 65 ரன்களையும், கம்ரான் அக்மல் 55 ரன்களையும், யூனிஸ்கான் 55 ரன்களையும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் உமர் அக்மல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.