Published:Updated:

விராத் கோலி நன்றாக விளையாட வேண்டும்: தற்கொலைக்கு முன் இளம்பெண் கடிதம்

விராத் கோலி நன்றாக விளையாட  வேண்டும்: தற்கொலைக்கு முன் இளம்பெண்  கடிதம்
விராத் கோலி நன்றாக விளையாட வேண்டும்: தற்கொலைக்கு முன் இளம்பெண் கடிதம்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தற்கொலை செய்துகொண்ட தீவிர  கிரிக்கெட் ரசிகையான இளம்பெண் ஒருவர்,விராத் கோலி நன்றாக விளையாட வேண்டும்  என்று  தற்கொலைக்கு முன் எழுதிய  கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

18 வயதான அந்த பெண் முதலாம் ஆண்டு என்ஜினியரிங் கல்லூரி மாணவி  ஆவார்.தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிவைத்த கடிதத்தில்,தான் விராத்  கோலியின் தீவிர ரசிகை என்றும், அவர் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து உடனடியாக  தெரியவராத நிலையில், அப்பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு  வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் தனது தற்கொலை கடிதத்தில்,கோலி ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றும்,  அவர் எதிர்காலத்தில் பல சாதனைகளை படைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, தனது  குடும்பத்தினர் எப்பொழுதாவது கோலியை சந்தித்தால்,அவரிடம் தான் அவரது தீவிர  ரசிகையாக இருந்ததை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.