Published:Updated:

'முத்தரப்பு டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா' - வங்கதேசத்தை வீழ்த்தியது!

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடரின் லீக் சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 

Photo Credit: Twitter/ICC

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இதையடுத்து இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் 15 ரன்களிலும், சவுமியா சர்க்கார் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டன் தாஸ் 34 ரன்களும், ஷபீர் அகமது 30 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் இந்த முறை தொடக்க ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்த  நிலையில்,  17 ரன்கள் எடுத்த போது ரோஹித் ஷர்மா அவுட் ஆகினார். தொடர்ந்து வந்த இளம்வீரர் ரிஷப் பண்ட் 7 ரன்களில் வெளியேறவே, ரெய்னா களம் கண்டார். தவானும், ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் ரெய்னா 28 ரன்களில் வெளியேற, தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான்  இந்தப் போட்டியிலும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். எனினும் 55 ரன்களில் அவுட் ஆனார். இதற்கிடையே, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி எட்டியது.