Published:Updated:

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்குலி?: பிசிசிஐ ஆலோசனை

சென்னை: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கங்குலியை நியமிக்கலாமா என  பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் அடுத்த  ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.அவரது தலைமையில் குறிப்பிடத்தக்க  வெற்றியை இந்திய அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

அவரது பயிற்சி பெரும்பாலான வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்ட  நிலையில், அவரது பதவிக்காலத்தை பிசிசிஐ-யும் நீட்டிக்க விரும்பவில்லை எனக்  கூறப்பட்டது.

##~~##
இதற்கிடையே சென்னையில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள்  போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி,"இந்திய அணிக்கு இந்திய  பயிற்சியாளர் தேவை. போதிய திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர்"  என்றார்.
எனவே, இந்தியாவில் உள்ள முன்னாள் வீரர்களில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக  தேர்வு செய்ய, குறிப்பாக கங்குலியை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி  வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.