Published:Updated:

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வு!

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வு!
ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வு!
ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வு!

பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி  பாண்டிங்,சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவிற்கு எதிராக பெர்த்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியுடன், தாம் ஓய்வு பெற போவதாக பாண்டிங் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் முடிவை தாமாகவே எடுத்ததாக ரிக்கி பாண்டிங் விளக்கமளித்துள்ளார்.  டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக  ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

##~~##
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரிக்கி பாண்டிங், இதுவரை  167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,366 ரன்கள் குவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.