Published:Updated:

சச்சின் அணிக்கு கட்டாயம் தேவை: டிராவிட்

சச்சின் அணிக்கு கட்டாயம் தேவை: டிராவிட்
சச்சின் அணிக்கு கட்டாயம் தேவை: டிராவிட்
சச்சின் அணிக்கு கட்டாயம் தேவை: டிராவிட்

மும்பை:  சச்சின் ஓய்வு பெறவேண்டும் என குரல்கள் எழுந்துள்ள நிலையில், சச்சின் தற்போது அணிக்கு கட்டாயம் தேவை என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் ரன்களை குவிக்க முடியாமல்  திணறி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு  எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் அவ்வளவாக சோபிக்க வில்லை.

மும்பை டெஸ்டில் 2 இன்னிங்சிலும் பனேசர் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இன்னும் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் 200 போட்டிகளில் பங்கேற்ற  முதல்வீரர் என்ற பெருமை அவர் பெறுவார். ஆனால் 2011 ஜனவரி மாதம் தென்  ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த சதமே கடைசி சதமாக உள்ளது.
அதன்பிறகு 15 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. 

இதனால் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.குறிப்பாக  தன்னுடைய எதிர்காலம் குறித்து சச்சின்,தேர்வு குழுவிடம் பேச வேண்டும் என்று இந்திய  முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கரும், கபில்தேவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சச்சின், தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீலை சந்தித்து கடந்த சில  போட்டிகளில் தான் அதிக ரன்களை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய எதிர்காலம்  குறித்து தேர்வு குழுவே முடிவு செய்யலாம் என்றும் கூறியதாகவும் கிரிக்கெட் வாரிய  வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

##~~##
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் சச்சின் இடம் பெறுவாரா?  என்ற கேள்வி எழுந்துள்ளது.

சச்சின் தேவை: டிராவிட்

இதனிடையே சச்சின் டெண்டுல்கர் முன்னெப்போதையும்விட அணிக்கு தற்போது தேவையாக உள்ளார் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய-இங்கிலாந்து அணிகள் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ள நிலையில்,இந்திய அணிக்கு மூத்த வீரர்கள் தற்போது கட்டாயம் தேவை.அதற்கு சச்சினை விட வேறு யார் சிறந்தவராக உள்ளார்? என டிராவிட் மேலும் கூறியுள்ளார்.