Published:Updated:

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அணி 142 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  இரண்டாவது டெஸ்ட்போட்டியில், 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் என்ற நிலையில்  ஆட்டத்தை இன்று காலை தொடங்கிய இந்திய அணி, மள மள வென்று மீதம் இருந்த  விக்கெட்களையும் இழந்தது.

காம்பிர் 65 ரன்களில் ஸ்வான் பந்தில் ஆட்டம் இழந்தார். ஹர்பஜன் 6 ரன்களும்  ஜாஹிர் 1 ரன்னும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன்  களம்  இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன்களைச் சேர்த்தனர்.

##~~##
குக் 18 ரன்களும், காம்ப்டன் 30 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி  விக்கெட் இழப்பின்றி இரண்டாவது இன்னிங்ஸில் 58 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இதை அடுத்து இந்திய இங்கிலாந்து  அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று, தொடரை சமன் செய்துள்ளது.