Published:Updated:

வொயிட்வாஷைத் தவிர்த்த இங்கிலாந்து - போட்டியை டிரா செய்த ஆஸ்திரேலியா!

வொயிட்வாஷைத் தவிர்த்த இங்கிலாந்து - போட்டியை டிரா செய்த ஆஸ்திரேலியா!
வொயிட்வாஷைத் தவிர்த்த இங்கிலாந்து - போட்டியை டிரா செய்த ஆஸ்திரேலியா!

வொயிட்வாஷைத் தவிர்த்த இங்கிலாந்து - போட்டியை டிரா செய்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பாரம்பர்யமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வென்று 3-0 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா ஏற்கெனவே வென்றுவிட்டது. இருப்பினும் தொடரை முழுமையாக வெல்லும் நோக்கில் நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கின் இரட்டைச் சதத்தின் உதவியால், 491 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியிருப்பது போல் இருந்த நிலையில், மழையால் அன்றைய போட்டி கைவிடப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.  

ஐந்தாவது நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட டேவிட் வார்னர் 305 பந்துகளைச் சந்தித்து 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில், தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் 438 பந்துகளில் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் போட்டியை டிரா செய்ய இருதரப்பு கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். இதன்மூலம், 5-0 என்ற கணக்கில் தொடரை வொயிட் வாஷ் செய்யும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இரட்டைச் சதமடித்த அலெஸ்டர் குக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.     
 

அடுத்த கட்டுரைக்கு