Published:Updated:

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வரும் 2018 ஜனவரியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. ஒருநாள் போட்டிகள், டெஸ்ட், டி20 போட்டிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றன. தற்போது, ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாப்பிள்ளை கேப்டன் விராட் கோலி, மீண்டும் அணிக்கு திரும்புகிறார். காயத்தால் ஓய்வில் இருந்த கேதர் ஜாதவ் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளார். தற்போதைய இலங்கை தொடரில் அதிரடி காட்டிவரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இத்தொடரில் இடம் கிடைத்துள்ளது. முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக குல்தீப், சாகல், அக்சர் படேல் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாகல், முகமது ஷமி, பும்ரா, அக்சர் படேல், தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பிப்ரவரி 1-ம் தேதி டர்பன் நகரில் முதல் ஒருநாள் போட்டி துவங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு