Published:Updated:

இது சுரேஷ் ரெய்னா பாஸ்... உரசாதீங்க...! ஒரு ரசிகனின் புலம்பல் #HBDRaina

இது சுரேஷ் ரெய்னா பாஸ்... உரசாதீங்க...! ஒரு ரசிகனின் புலம்பல் #HBDRaina
இது சுரேஷ் ரெய்னா பாஸ்... உரசாதீங்க...! ஒரு ரசிகனின் புலம்பல் #HBDRaina

இது சுரேஷ் ரெய்னா பாஸ்... உரசாதீங்க...! ஒரு ரசிகனின் புலம்பல் #HBDRaina

ஊருக்குள்ளே கிரிக்கெட் பார்க்கிறவங்க தோனி ரசிகராகவோ, கோலி ரசிகராகவோ மட்டும்தான் இருப்பாங்கனு தப்புக்கணக்கு போட்டுடாதீங்க பாஸ். இங்கே ரமேஷ் பவாருக்கும் ரசிகர்கள் இருக்காங்க, குல்தீப் யாதவுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. அதுமாதிரி... நான் ஒரு சுரேஷ் ரெய்னா ரசிகன். இப்படித்தான் `நான் சுரேஷ் ரெய்னா ரசிகன்'னு சொன்னால் `நீ யார் ரசிகன்'னு கேட்டு `சுரேஷ் ரெய்னா'னு சொன்னா... எல்லோரும் மூணு செகண்டாவது எக்ஸ்ட்ரா பார்ப்பாங்க. அதான் தலைவனோட மாஸ், தெறி, மெர்சல். அதனாலேயே அடிக்கடி வெளியே சொல்லிக்கிறதில்லை. ஆனா, இப்போ அதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. என் தலைவனுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கு. இது ரெய்னா சார், உரசாதீங்க...

இப்போ அணியில் இடம் கொடுக்காமல் என் தலைவனை டபாயக்குறீங்களே, உண்மையில் எந்த இடத்தில் இறக்கிவிட்டாலும் அடிச்சு வெளுக்குற அசகாய சூரன் எங்க சின்னத்தல. அதுதான் பெரிய ஆப்பாகவும் அமைஞ்சிடுச்சு. கோலி எல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஒன்-டவுனில் இறங்கி பிரிச்சு மேய்வார். முதல்ல ரெய்னாவே பெரிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்தான், அப்புறம்தான் இந்த மிடில் ஆர்டர், ஃபினிஷர் எல்லாம். அதான் எந்த இடத்துல இறக்கிவிட்டாலும் நல்லா விளையாடுறார்னு ஐந்தாவது, ஆறாவது விக்கெட்டுக்கு இறக்கிவிட்டீங்க. அப்பவும் சீரும் சிறப்பும் செம்மையான சம்பவங்களாத்தான் செஞ்சார். என்ன, பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியலை. கவனிக்கப்படாம போயிட்டார். இதே ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஒன் டவுன்தான் இறங்குவார். 25 பந்துக்கு 87 ஞாபகம் இருக்குல்ல? சேவாக்கே கண்ணாடியை கழட்டிட்டு ஆச்சர்யமா பார்த்தார். 

கோலிக்கு முன்னாடியே எங்க ஆளு கேப்டனா ஜொலிச்சு, பல டீம்களின் சோலியை முடிச்சிருக்கார். பங்களாதேஷ் கிட்டே வெறும் 105 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, ஒட்டுமொத்த இந்தியாவையுமே பதைபதைக்க வெச்சு, பதிலுக்கு 58 ரன்னுக்கு டீமையே முடிச்சு பழிக்குபழி வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். எல்லோத்தையும் மறந்துட்டீங்கள்ல..! ரெய்னா அளவுக்கு பார்டனர்ஷிப் கொடுக்க இப்போ யார் டீம்ல இருக்கா, சொல்லுங்க பார்ப்போம். 

ரெய்னா பேட்டிங் ஆடுறதை பார்க்குறதே செம த்ர்லிங்கான அனுபவம். ஏன்னா, என் தலைவனுக்கு பயம்னாலும் என்னனு தெரியாது, `ஃபார்ம்'னாலும் என்னனு தெரியாது. கடைசி மேட்ச்லதான் அரைசதம் அடிச்சிருப்பார், அடுத்த மேட்ச்லேயே டக் அவுட் ஆகிடுவார். இப்படி, ரெய்னா ஒவ்வொருமுறை களத்துல இறங்கும்போதும், ரசிகர்களுக்கு கம்பி மேல நடக்குற மாதிரி கிலியாத்தான் இருக்கும். அந்த அனுபவமெல்லாம் கிடைக்கவிடாம பண்ணிட்டீங்களேய்யா. பத்து ரன்னுக்குள்ள ஒரு கேட்ச் சான்ஸ் கொடுப்பார். அதை விட்டாய்ங்க, எதிர் டீம் செத்தாய்ங்க. ஜெர்ஸியோடு ஸ்லீவை ஏத்திவிட்டு, முட்டி போட்டு பேட்டை சுத்துனா, ஒண்ணு அவுட் ஆஃப் ஸ்டேடியம் இல்லனா அவுட் பை கேட்ச். அப்படி அசுரத்தனமா ஆடியே டி-20, ஒருநாள், டெஸ்ட்னு மூணு ஃபார்மாட்களிலும் சதம் அடிச்சவரு எங்க தல.

களத்துக்குள்ள செம ஸ்டைலிஷான ஆள். தலைமுடியை மேல்நோக்கி கோதிவிட்டு சிரிக்கும்போது, அழகு சும்மா அள்ளும். விக்கெட் விழுந்ததும் முதல் ஆளாக முயல்குட்டி மாதிரி துள்ளி குதிச்சு ஓடி  வந்து கட்டிபிடி வைத்தியம் கொடுக்கும்போது என்ன அம்சமா இருப்பார் தெரியுமா? `இன் சைடு அவுட்' ஷாட் ஆடும்போது, தலைவனை பார்க்க கண் கோடி வேணும். ஆதார் கார்டுலேயே அழகா இருப்பாப்ல. இவ்வளவு ஏன், இப்பத்தான் `கோலிடி', `பாண்டியாடி' எல்லாம், அப்பலாம் `ஹே ரெய்னாடி'தான். ட்விட்டர் தெறிக்கும், ஃபேஸ்புக் நொறுக்கும். `மேட்ச்ல ஆடுறதே இல்ல, ஆனால், நாளுக்கு பத்து போட்டோ இன்ஸ்டாகிராம்ல போடுறார். எதுக்கு...'னு நீங்க கடுப்பாகலாம். வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க, உங்க வாய்க்கு எல்லாம் பேட்டாலேயே பூட்டு போட்டுடுவார். 

இத்தனை ஸ்பெஷல் அயிட்டங்கள் இருந்தும் எங்க தலைவனை ஏன் அணியில் சேர்க்கலை? ஆர்.சி.பி கோட்டாதானே! ரெய்னாவை மட்டும் பழிவாங்குறது எந்த விதத்துல நியாயம் ஆஃபிஸர்ஸ்? அரைக்குழி பந்து (ஷார்ட் பால்) போட்டால் அடிக்கமுடியாமல் திணறுவார்தான், கீப்பர் கிட்ட சமத்தா கேட்ச் கொடுத்துட்டு சைலண்டா கிளம்பிடுவார்தான். அட, யானைக்கும் அடி சறுக்கும்லப்பா. இறுதியாக ஃபீல்டிங்கில் ஃப்ளாஷின் வேகத்தோடும் பேட்டிங்கில் சூப்பர்மேனின் பலத்தோடும் பவுலிங்கில் பேட்மேனின் சாதுர்யத்தோடும் செயல்படும் சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்காமல் இருப்பது, இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸாரி பாஸ், நான் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்!

அடுத்த கட்டுரைக்கு