Published:Updated:

சர்வதேச ஒருநாள் போட்டி தர வரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்!

சர்வதேச ஒருநாள் போட்டி தர வரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்!
சர்வதேச ஒருநாள் போட்டி தர வரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்!

சர்வதேச ஒருநாள் போட்டி தர வரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்தார். 

Photo Credit : ICC

நியூஸிலாந்து தொடரின் 3 போட்டிகளில், 2 சதங்கள் உள்பட 263 ரன்கள் குவித்த விராட் கோலி, கேரியரில் அதிகபட்ச புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்தார். தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸிடம் முதலிடத்தை இழந்த 10 நாள்களுக்குள், கோலி முதலிடத்தை எட்டிப்பிடித்தார். 889 புள்ளிகளைப் பெற்றுள்ள விராட் கோலி, ஐசிசி தர வரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் கடந்த 1998-ல், சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்துவந்தது. இந்தப் பட்டியலில், டிவிலியர்ஸ் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் இருக்கின்றனர். மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை ரோகித் ஷர்மா 7-வது இடமும், தோனி 11-வது இடமும் பிடித்துள்ளனர். 

நியூஸிலாந்து தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா, முதல்முறையாக பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி முதலிடத்திலும் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். மேலும், இந்திய அணியின் அக்‌ஷர் படேல் 8-வது இடமும் புவனேஷ்வர் குமார் 15-வது இடமும் பிடித்துள்ளனர். 

அணிகளைப் பொறுத்தவரை 121 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள், முறையே 3, 4,5-வது இடங்களைப் பிடித்துள்ளன.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு