Published:Updated:

மனைவியின் உடல்நலன்: ட்விட்டரில் உருகிய தவான்!

மனைவியின் உடல்நலன்: ட்விட்டரில் உருகிய தவான்!
மனைவியின் உடல்நலன்: ட்விட்டரில் உருகிய தவான்!


ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலக்கு வேண்டும் என்று தவான் பி.சி.சி.ஐ-யிடம் கோரியிருந்தார்.

மனைவியின் உடல்நலன்: ட்விட்டரில் உருகிய தவான்!


இதையடுத்து, அவரின் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்றது. மேலும், அவருக்குப் பதிலாக ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், "என் மனைவியுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில், இது கண்டிப்பாக அவருக்கு அது வலிமையைக் கொடுக்கும். இன்னும் சில நாள்களில் அறுவைசிகிச்சை நல்லபடியாக நடக்கும்" என்று கூறியுள்ளார்.


அவரது ட்வீட்டிற்கு பலர், "உங்களது மனைவிக்கு உடல் நிலை விரைவில் சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள்" என்று கூறியுள்ளனர்.
தவான், ஆயிஷா முகர்ஜி தம்பதிக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.