Published:Updated:

'நம்பர்-1' இடத்தை தக்க வைப்போம்: தென் ஆப்ரிக்க கேப்டன ஸ்மித் நம்பிக்கை!

'நம்பர்-1' இடத்தை  தக்க வைப்போம்: தென் ஆப்ரிக்க கேப்டன ஸ்மித் நம்பிக்கை!
'நம்பர்-1' இடத்தை தக்க வைப்போம்: தென் ஆப்ரிக்க கேப்டன ஸ்மித் நம்பிக்கை!
'நம்பர்-1' இடத்தை  தக்க வைப்போம்: தென் ஆப்ரிக்க கேப்டன ஸ்மித் நம்பிக்கை!

லண்டன்: டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடத்தை தொடர்ந்து தக்க வைப்போம்  என, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என, வென்றது. இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

அடுத்து வரும் நவ., 9 முதல் டிச., 4 வரை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

கடந்த 2009ல் சர்வதேச தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை பெற்றோம். அப்போது, அதை தக்கவைக்க எங்கள் தரப்பில் இருந்து எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இப்போது மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியுள்ளோம். இந்த முறை, முதலிடத்தை தக்கவைக்க, தொடர்ந்து வலுவான அடித்தளத்தை அமைக்க போராடுவோம்.

போட்டியின் கடைசி நேரங்களில் எங்களது பவுலிங் இன்னும் முன்னேற்றம் அடையவேண்டும். ஒருவேளை காயமடைந்த வீரர்கள் பார்முக்கு வரும் போது, இவை சரியாகி விடும் என்று நம்புகிறேன். அப்படி அமைந்தால், அஞ்சத்தக்க அணியாக உருவாகும்.

ஆனால், எங்கள் அணி, அடுத்து ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்க உள்ளது. இது மிகவும் சவாலான தொடர். இதில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து முன்னிலை வகிப்போம் என்று நம்புகிறோம். என்றார்.