Published:Updated:

இந்தியா, நியூஸிலாந்து அணியினர் ஹைதராபாதில் தீவிர பயிற்சி!

இந்தியா, நியூஸிலாந்து அணியினர் ஹைதராபாதில் தீவிர பயிற்சி!
இந்தியா, நியூஸிலாந்து அணியினர் ஹைதராபாதில் தீவிர பயிற்சி!
இந்தியா, நியூஸிலாந்து அணியினர் ஹைதராபாதில் தீவிர பயிற்சி!

ஹைதராபாத்: ஹைதராபாதில் துவங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்காக இந்தியா, நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சியை செய்து வருகிறார்கள்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், வரும் வியாழக்கிழமை ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திங்கள்கிழமை அங்கு வந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய வீரர்கள், முதலில் கால்பந்து விளையாடினர். பின்னர் தீவிரமான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.

முக்கியமாக சச்சின் தீவிரமான பேட்டிங் பயிற்சியில் இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார். அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட இருக்கிறார்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் சேவாக், கம்பீர், கோலி ஆகியோரும் வலைப்பயிற்சியில் கூடுதல் நேரம் செலவிட்டனர். இஷாத் சர்மா, உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர்கள் ஓஜா, அஸ்வின் ஆகியோர் அவர்களுக்குப் பந்து வீசினர். காலையில் மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்தியா, நியூஸிலாந்து அணியினர் ஹைதராபாதில் தீவிர பயிற்சி!

இதேபோல நியூசிலாந்து வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இவர் தனிப்பிரிவாக செயல்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் இவர்கள் பந்து வீச்சு எடுபடாமல் போனதால் தற்போது இவர்கள் கவனம் அனைத்தும் பந்துவீச்சிலேயே உள்ளது.

முன்னணி பேட்ஸ்மேன்கள் மட்டும் அவ்வபோது பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.