சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாடின் இரண்டாவது நாளான நேற்று, இந்தியா வீரர்கள், வீராங்கனைகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? ஒரு குட்டி ரவுண்டப்!
ஓப்பன்
TEAM 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Moldova (MDA ) 1/2 ~ 3 1/2 India (IND )
முதல் போர்டில் இவான் ஸ்கிட்கோவை எதிர்கொண்டார் பெண்டலா ஹரிகிருஷ்ணா. 39 மூவ்களில் இவானை வீழ்த்தினார் ஹரிகிருஷ்ணா.

இரண்டாவது போர்டில் மகோவே ஆண்டிரியை எதிர்த்து ஆடினார் அர்ஜுன் எரிகஸி. மகோவேவுக்கு ஒரு பான் அதிகம் இருந்தும், இருவருமே போட்டியை டிராவை நோக்கி நகர்த்திச் செல்ல, (repeated checks) போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது போர்டில் ஹமிட்டிவிசி விளாடிமிரை எதிர்கொண்டார் SL நாராயணன். SL நாராயணன் குயின்'ஸ் பான் கேம் ஓப்பனிங்கை தேர்வு செய்து ஆடினார். விளாடிமிர் ஒரு பிஷப்பை இழக்கும் சூழலுக்கு நாராயணனால் தள்ளப்பட்டார். விளாடிமிர் ரிசைன் செய்ததால், SL நாராயணன் வெற்றி பெற்றார்.

சசிகிரண் கிருஷ்ணனின் அதிரடியை சமாளிக்க முடியாமல் போட்டி முடிவதற்கு ஒரு மூவ் இருக்கும் நிலையில் ரிசைன் செய்தார் பல்டால் லுலியன்.

இந்தியாவின் முதல் அணி நான்கு போட்டிகளில் 3 வின், 1 டிரா என மொத்தம் 3.5 புள்ளிகள் கிடைத்தன.
TEAM 2
India 2 (IND) 4~0 Estonia (EST)
இந்தியாவின் இரண்டாவது அணி எஸ்டோனியா அணியுடன் மோதியது. குகேஷ் கீக் கல்லேவுடன் மோதினார். ரூக் & பான் எண்டிங் பொசிசனில், குகேஷ் கீக் கல்லேவை வென்றார்.

முதல் நாள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பிரக்ஞானந்தா, இந்தப் போட்டியில் பிளாக் நிறத்தில் சுகுவின் கிரிலுடன் விளையாடினார். சுகுவின் e4 என ஆரம்பிக்க, சிசிலியன் டிஃபென்ஸ் தேர்வு செய்தார் பிரக். ஒரு பக்கம் பானை குயினாக்க ப்ரொமோட் செய்துகொண்டே இன்னொரு பக்கம் மேட்டுக்கான முடிவிலும் இறங்கினார் பிரக். சுகுவின் கிரில் ரிசைன் செய்துவிட்டார்.

அதிபன் இந்தப் போட்டியில் slav defence ஓப்பனிங் தேர்வு செய்தார். குயின், பிஷப், பான் வைத்து ஒரு பக்கம் மேட்டுக்கு அதிபன் அதிரடியாக முன்னேற, வோலோடின் அலெக்ஸாண்டர் ரிசைன் செய்தார்.

முதல் சுற்றில், இந்தியாவுக்கான முதல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரௌநக் சத்வானி, இந்த முறை ஆண்டிரி ஷிஷ்கோவை எதிர்த்து ஆடினார். செக் மேட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது இந்தப் போட்டியில்தான்.
இந்தியாவின் இரண்டாவது அணி நான்கு போர்டுகளிலும் வென்று அசத்தியது.

INDIA 3
மெக்ஸிகோ 1.5 ~ இந்தியா 3 2.5
இந்தியாவின் மூன்றாவது அணியில் முதல் மூன்று போர்டுகளும் டிராவில் முடிய, நான்காவது போர்டில் விளையாடிய முரளி கார்த்திகேயன் மட்டும் தன்னை எதிர்த்து ஆடிய கபோ விடல் உயிரலை எதிர்த்து வென்றார்.
பெண்கள் அணி
இரண்டாம் நாள் ஆட்டத்திலும் பெண்கள் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது.
INDIA (1) அணி 3.5 ~ ARGENTINA 0.5
முதல் போர்டில் ஆடிய கொனிரு ஹம்பி மட்டும் டிரா செய்ய மற்ற போர்டுகளில் விளையாடிய வைஷாலி, டானியா, பக்தி குல்கர்னி வெற்றி பெற்றனர். முதல் நாள் ஆட்டத்தில், நூறு மூவ்களுக்கு மேல் எடுத்துக்கொண்ட டானியா இந்த முறை 36 மூவ்களிலேயே வெற்றி பெற்றார்.

INDIA 2 (IND 2) 3.5 ~ LATVIA (LAT) 0.5
இரண்டாவது போர்டில் விளையாடிய பத்மினி ரௌட் மட்டும் டிரா செய்ய, மற்ற மூவரும் வெற்றி பெற்றார்கள்.
SINGAPORE 1 ~ INDIA 3 (IND3) 2
முதலிரண்டு போர்டுகளில் ஆடிய ஈஷா கர்வடேவும், நந்திதாவும் வெற்றி பெற்றார்கள். பிரத்யுஷாவும், விஷ்வா வஸ்னவாலாவும் டிரா பெற்றார்கள். ஈஷாவும், நந்திதாவும் 30 மூவ்களிலேயே எதிர் நாட்டு வீரர்களை எளிதாக வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.